SRH vs MI Score LIVE : 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை
IPL 2021 SRH vs MI Score LIVE : ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் அபுதாபியில் நடைபெறும் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன.
மும்பை அணி நிர்ணயித்த 236 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் மும்பை அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு 36 பந்தில் 94 ரன்கள் தேவைப்படுகிறது. மணீஷ் பாண்டே 35 ரன்களுடனும், பிரியம் கார்க் 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
மும்பை அணி நிர்ணயித்த 236 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் ஹைதராபாத் அணி 13 ஓவர்களில் 138 ரன்களை குவித்துள்ளது.
ஹைதராபாத் அணியை 65 ரன்களுக்குள் ஆட்டமிழக்க செய்யாத காரணத்தால் மும்பை அணி ப்ளே ஆப் செல்லும் வாய்ப்பை தவறவிட்டு தொடரில் இருந்து வெளியேறியது. கொல்கத்தா அணி வாய்ப்பு பெற்று நான்காவது அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றியது.
மும்பை அணிக்கு எதிராக அதிரடியாக பேட் செய்து வரும் ஹைதராபாத் அணி 9 ஓவரகள் முடிவில் 100 ரன்களை கடந்துள்ளது. ஆனால், அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளை இழந்து ஹைதராபாத் தடுமாறி வருகிறது.
ஹைதராபாத் அணிக்கு எதிராக மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 235 ரன்கள் குவித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி 16.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை எடுத்தது.
மும்பை அணியின் ரன் வேட்டைக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக ரஷீத்கான் குருணால் பாண்ட்யாவை 9 ரன்களில் ஆட்டமிழக்க செய்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. சூர்யகுமார் யாதவ் 32 ரன்களுடனும், குருணால் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இளம் பந்துவீச்சாளர் அபிஷேக் சர்மா தனது முதலாவது ஓவரிலே பொல்லார்ட், ஜிம்மி நீஷம் இருவரையும் ஆட்டமிழக்க செய்து ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி டேஞ்சர் பேட்ஸ்மேன் பொல்லார்டை அபிஷேக் சர்மா தனது சுழற்பந்துவீச்சால் ஆட்டமிழக்க செய்தார். இதனால், மும்பை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி 12 ஓவர்கள் முடிவில் 146 ரன்களுடன் களத்தில் உளளனர். பொல்லார்ட் 10 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
டெல்லி அணியின் சித்தார்த் கவுல் வீசிய 11வது ஓவரில் மும்பை அணியின் முக்கியமான வீரர் பொல்லார்ட் எல்.பி.டபுள்யூ ஆகியதாக கூறி எல்லைக்கோடு வரை சென்றுவிட்டார். ஆனால், மூன்றாவது அம்பயர் முடிவில் நாட் அவுட் என்று தெரியவந்தது.
மும்பை அணிக்காக அதிரடியாக ஆடி டேஞ்சர் பேட்ஸ்மேனாக களத்தில் நின்ற இஷான்கிஷான் உம்ரான் மாலிக் பந்தில் 32 பந்தில் 84 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
மும்பை அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா சிக்ஸர் அடிக்க முயற்சித்து 7 ரன்களில் ஹோல்டர் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
மும்பை அணி 8 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்துள்ளது. இஷான் கிஷான் தொடர்ந்து அதிரடியாக ஆடி வருகிறார்.
இஷான் கிஷான் தொடர்ந்து அதிரடியாக ஆடி வருவதால் மும்பை அணி 4 ஓவர்களில் 63 ரன்கள் எடுத்துள்ளது. இஷான் கிஷான் 16 பந்தில் 50 ரன்களை அடித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷான் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் அடுத்தடுத்து 4 பவுண்டரிகள் அடித்து அதிரடியாக ஆடியுள்ளார். மும்பை அணி 2 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்துள்ளது.
Background
அபுதாபியில் நடைபெறும் முக்கியமான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ஹைதராபாத் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -