Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெற்ற முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Continues below advertisement

கொரோனா தொற்றுக்கு பிந்தைய உடல்நல பாதிப்பால் இந்திய தடகள ஜாம்பவான் மில்கா சிங் நேற்று இரவு உயிரிழந்தாா். மில்கா சிங் மறைவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

Continues below advertisement

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் தடகளப் பிரிவில் தங்கம் வென்ற சுதந்திர இந்தியாவின் முதல் வீரர் மில்கா சிங். ஒலிம்பிக் தடகளத்தில் 1960 ரோமில் நடந்த கோடைக்கால ஒலிம்பிக் போட்டியிலும் 1964 இல் டோக்கியோவில் நடந்த கோடைக்கால ஒலிம்பிக் போட்டியிலும் கலந்து கொண்டு இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர். மின்னல் வேகத்தில் ஓடும் திறன் பெற்ற இவர் "பறக்கும் சீக்கியர்' (Flying Sikh) என அழைக்கப்பட்டார். 


நீட் தேர்வை ஆகஸ்ட் 1ஆம் தேதி  ஆன்லைன் மூலம் நடத்த  தேசியத் தேர்வு முகமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு தொடங்குவதற்கு 60 நாட்களுக்கு முன்பாக, தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் வெளியிடப்படும். ஆனால், தேர்வுக்கு 45 நாட்கள் உள்ளதால், தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

தமிழ்நாட்டின் நீட் தேர்வுக்கு விதிவிலக்கு கிடைக்கும் வரை நீட் தேர்வு நடைமுறையில் உள்ளது என்பதே உண்மை என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

நாட்டில் 513 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  தற்போது பாதிப்பில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை 96 சதவீதமாக உள்ளது. தடுப்பூசி போட்டவர்களில் 75 முதல் 80 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலை ஏற்படவில்லை.

NEET | ”இந்த நிமிடம்வரை நடைமுறையில் இருக்கும் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..! 

தமிழ்நாட்டில்  2,500 குழந்தைகள் கொரோனா நோய்த் தொற்றால் தாய் அல்லது தந்தையை இழந்துள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். 

திருவள்ளூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி போடும் முகாம் முதற்கட்டமாக திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 21ம் தேதியன்று நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

திருக்கோவில்களில் உள்ள விலை உயர்ந்த ஆபரணங்களை பாதுகாப்பான இடத்தில் வைக்கும் வகையில், 108 இடங்களில் பாதுகாப்பு அறைகளை அமைக்க மாநில அரசு முடிவு செய்திருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். 

பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா  உடல்நிலை கோளாறு காரணமாக, நேற்று சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Sivashankar Baba | மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் குற்றம்சாட்டப்பட்ட சிவசங்கர்..!

Continues below advertisement