தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தில் இருந்தது. இதனைத் தொடர்ந்து, தொற்று பரவலை முதலில் பகுதி நேர ஊரடங்கு, ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இருப்பினும், கொரோனா தொற்று வேகமாக பரவி வந்தது. முதல் அலையை காட்டிலும், இரண்டாவது அலையில் பாதிப்புகளும், அதிகரிப்புகளும் அதிகரித்தன.  குறிப்பாக சென்னை, கோவை ஆகிய மாவட்டங்களில் தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்தன. இதனை கட்டுப்படுத்தும் வகையில், மருத்துவ குழு நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிபுணர் குழு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் கடந்த சிலவாரங்களாக தளர்வுகள் அற்ற ஊரடங்கை பிறப்பித்து உத்தரவிட்டிருந்தார். இது, நல்ல பலனை கொடுத்தது. இதனால், 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தொற்று குறையத் தொடங்கின. இதன்காரணமாக கடந்த 7ஆம் தேதியில் இருந்து ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்பட்டன.


Sivashankar Baba | மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் குற்றம்சாட்டப்பட்ட சிவசங்கர்..!


இதனைத் தொடர்ந்து, 14ஆம் தேதியில் இருந்து 21 ஆம் தேதி வரை 4 வது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஊரடங்கு முடிய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து இன்று காலை 11 மணியளவில் மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத் துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையின்போது பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 11 மாவட்டங்களிலும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 


தமிழ்நாடு முழுவதும் நேற்று முன்தினம் 9 ஆயிரத்து 118 என்று கொரோனா பாதிப்பு பதிவாகியிருந்த நிலையில், நேற்று 8 ஆயிரத்து 633 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.




இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 6 ஆயிரத்து 497 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 28 ஆயிரத்து 322 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் நேற்று 492 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் 8 ஆயிரத்து 141 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 3 ஆயிரத்து 360 ஆகும். தமிழ்நாடு முழுவதும் தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 14 லட்சத்து 8 ஆயிரத்து 101 நபர்கள் ஆவர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர் அடங்குவர்.


தமிழ்நாடு முழுவதும் நேற்று தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 882 ஆகும். பெண்கள் 3 ஆயிரத்து 751 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் நேற்று கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 860 ஆகும். இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் 22 லட்சத்து 86 ஆயிரத்து 653 நபர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


மதுரை விரைந்தது, முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிப்பதற்கான சிறப்பு தனிப்படை..!