Tamil Nadu LIVE Updates: ஹெலிகாப்டர் சகோதரர்கள் மலேசியாவில் ரூ.550 கோடி முதலீடு

Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.

ABP NADU Last Updated: 16 Sep 2021 01:09 PM
Breaking News LIVE: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டி

Covid 19 Positive: சென்னை கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா

சென்னையில் வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்

3 வேளை அன்னதானம் திட்டம் தொடக்கம்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு

முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு

பல இடங்களில் தொடரும் சோதனை

வீரமணிக்கு சொந்தமான ஓட்டல்கள், கல்லூரிகள், மண்டபம் உள்ளிட்ட பல இடங்களில் தொடரும் சோதனை

28இடங்களில் சோதனை

சென்னை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் 28இடங்களில் சோதனை நடைபெறுகிறது

கேசி வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் கேசி வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை

swiggy- zomato செயலிகளை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு முடிவு

ஸ்விகி- ஜோமேடோ போன்ற செயலிகளை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வர ஜிஎஸ்டி கவின்சில் முடிவெடுத்துள்ளது. இதன்படி, உணவு விநியோகம் செய்யும் ஆன்லைன் செயலிகள் உணவகங்களாக கருதப்படும்.  உணவு விநியோகத்துக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.         

swiggy- zomato செயலிகளை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு முடிவு

ஸ்விகி- ஜோமேடோ போன்ற செயலிகளை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வர ஜிஎஸ்டி கவின்சில் முடிவெடுத்துள்ளது. இதன்படி, உணவு விநியோகம் செய்யும் ஆன்லைன் செயலிகள் உணவகங்களாக கருதப்படும்.  உணவு விநியோகத்துக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.         

1-8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு குறித்து மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனை - அமைச்சர்

1-8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு குறித்து மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்கு பிறகு முதல்வர் முடிவு எடுப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். 

கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

கோவையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், சுற்றுலா பகுதிகள், வணிக வளாகங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை

Background

Latest News in Tamil Today LIVE


தொலை தொடர்பு துறையில் அமைப்பு மற்றும் செயல்முறை சீர்த்திருத்தங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. 


 



அதன்படி, தொலைதொடர்பு அல்லாத வருவாய் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயின் வரையறையிலிருந்து விலக்கப்படும். உரிமம் கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் மீதான வங்கி உத்திரவாத தேவைகள் 80 சதவீதம் குறைப்பு. வட்டி விகிதங்கள் சீரமைப்பு / அபராதங்கள் நீக்கம். இனிமேல் நடைபெறும் ஏலங்களுக்கு வங்கி உத்திரவாதம் தேவையில்லை. அலைக்கற்றை (ஸ்பெக்டரம்) ஏலம் எடுக்கும் காலம் 20 ஆண்டிலிருந்து 30 ஆண்டுகளாக அதிகரிப்பு. இந்திய தொலைதொடர்பு துறையில் 100 சதவீதம் வரை முன்அனுமதிப் பெறாமல்  முதலீடு செய்ய  அனுமதிக்கும் வகையில், தற்போதுள்ள வெளிநாட்டு முதலீடு அனுமதிக் கொள்கையில் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு சீர்த்திருத்தங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.