மேலும் அறிய

ஓடும் ரயிலில் துப்பாக்கிச் சூடு.. ஆர்.பி.எஃப் வீரர் உள்பட 4 பேர் உயிரிழப்பு; மகாராஸ்ட்ராவில் அதிர்ச்சி

ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் பால்கர் ரயில் நிலையத்தைக் கடந்து சென்று கொண்டு இருக்கையில் ஆர்பிஎஃப் காவலர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் ரயிலில் இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுள்ளார்.

மும்பை நோக்கி சென்றுகொண்டிருந்த ரயிலில் பயணித்தவர்களை ஆர்.பி.எஃப் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மகாராஸ்ட்ரா மாநிலம் பால்கர் ரயில் நிலையத்தைக் கடந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது ஆர்பிஎஃப் காவலர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் ரயிலில் இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுள்ளார்.

இதைப்பார்த்த சக பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஆனால், அதில் ஒரு ஆர்பிஎஃப் காவலர் மற்றும் மூன்று பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேரை சுட்டுவிட்டு தஹிசார் ரயில் நிலையம் அருகே ரயிலில் இருந்து குதித்து தப்பிக்க முயற்சி செய்த ஆர்பிஎஃப் காவலரை அங்கிருந்த காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அந்த வீரரிடம் இருந்து துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளது. 

இதையடுத்து பிடிபட்ட வீரரிடம் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது, இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.பி.எஃப் வீரர் ஒருவரே ரயில் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு நடைபெற்ற ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் மும்பை செண்ட்ரல் ரயில் நிலையத்தை எட்டியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

EPFO Auto Settlement: PF Claim-க்கு மாறிய விதிகள்; இனி 3 நாட்கள் தான்; 'தாமதமானால் அதிகாரிக்கு..' EPFO அதிரடி அறிவிப்பு
PF Claim-க்கு மாறிய விதிகள்; இனி 3 நாட்கள் தான்; 'தாமதமானால் அதிகாரிக்கு..' EPFO அதிரடி அறிவிப்பு
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
தங்கப் பத்திர முதலீடு: ஜூலையில் முன்கூட்டியே பணமாக்கி வரிச் சலுகையுடன் லாபம் ஈட்ட பொன்னான வாய்ப்பு!
தங்கப் பத்திர முதலீடு: ஜூலையில் முன்கூட்டியே பணமாக்கி வரிச் சலுகையுடன் லாபம் ஈட்ட பொன்னான வாய்ப்பு!
EPF பணம் எடுப்பது இனி எளிது! UPI மூலம் நேரடியாக வங்கிக் கணக்குக்கு – முழு விவரம்
EPF பணம் எடுப்பது இனி எளிது! UPI மூலம் நேரடியாக வங்கிக் கணக்குக்கு – முழு விவரம்

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anitha Radhakrishnan : ‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா ராதாகிருஷ்ணன் கைதின் பரபரப்பு பின்னணி..!
‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா கைதின் பரபரப்பு பின்னணி..!
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Ayatollah Ali Khamenei Funeral: இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
Vaigai Selvan quits AIADMK : அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
How Car Airbags Work: இவ்ளோ நாள் கார் ஓட்டுறீங்களே, ஏர்பேக்குல என்ன இருக்கு, அது உயிர எப்படி காப்பாத்துதுன்னு தெரியுமா.?
இவ்ளோ நாள் கார் ஓட்டுறீங்களே, ஏர்பேக்குல என்ன இருக்கு, அது உயிர எப்படி காப்பாத்துதுன்னு தெரியுமா.?
EPFO Auto Settlement: PF Claim-க்கு மாறிய விதிகள்; இனி 3 நாட்கள் தான்; 'தாமதமானால் அதிகாரிக்கு..' EPFO அதிரடி அறிவிப்பு
PF Claim-க்கு மாறிய விதிகள்; இனி 3 நாட்கள் தான்; 'தாமதமானால் அதிகாரிக்கு..' EPFO அதிரடி அறிவிப்பு
Revolt RVX: ஒரு சார்ஜில் 160 கிமீ பயணம்; அதிவேக சார்ஜிங்; நவீன அம்சங்கள்; அசர வைக்கும் ரிவோல்ட் RVX; விலை என்ன.?
ஒரு சார்ஜில் 160 கிமீ பயணம்; அதிவேக சார்ஜிங்; நவீன அம்சங்கள்; அசர வைக்கும் ரிவோல்ட் RVX; விலை என்ன.?
Embed widget