செவ்வாய் அன்று மும்பை வில்லெ பார்லேயில் மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை வழியாகச் செல்லும் போது "மாஞ்சா" கயிறு கழுத்தில் அறுத்து ஒருவர் காயமடைந்தார். செவ்வாய்க்கிழமை மாலை மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தில் தொழில்நுட்பப் பிரிவில் பணிபுரியும் கைகர் என்பவர் பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அவரது நண்பரான அமோல் பவார் என்பவரும் அந்த வாகனத்தில் அமர்ந்து இருந்தார். அப்போது திடீரென மாஞ்சா கயிறு ஒன்று அவர்களது கழுத்தை அறுத்துள்ளது. மேலும் கைகருக்கும், அவரது நண்பருக்கும் அதில் பலத்த காயம் ஏற்பட்டது.
சம்பவம் குறித்து கைகர் கூறுகையில், “நாங்கள் உள்நாட்டு விமான நிலையத்திற்கு எதிரே உள்ள மேம்பாலத்தை கடக்கும்போது திடீரென ஒரு நூல் என் கழுத்தை அறுத்துவிட்டது. நான் அதை என் கையால் இழுக்க முயற்சித்தேன், ஆனால் முடியவில்லை. பின்னர், அது மாஞ்சா என்பதை உணர்ந்தேன்," என்றார்.
பிரபல டென்னிஸ் வீரரை ஆபாச வார்த்தைகளால் திட்டிய டிவி தொகுப்பாளர்கள்.. இணையத்தில் வைரலான வீடியோ!
பின் அமர்ந்திருந்த அவரது நண்பர் மாஹிமில் உள்ள எஸ்.எல். ரஹேஜா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். மாஞ்சா தாக்கியதில் அவரது மூன்று விரல்கள் வெட்டப்பட்டு கழுத்தில் மூன்று தையல்களும், அவரது விரல்களில் இரண்டு தையல்களும் போடப்பட்டுள்ளன.
Watch Video | 'அது குப்பை இல்லை.. குழந்தை.' கவனித்த கடைக்காரர்! சிசிடிவியால் சிக்கிய இளம்பெண்!
வைல் பார்லே போலீசார் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர். இதுகுறித்து மேலும் கைகர் கூறுகையில், "சம்பவத்தை தொடர்ந்து அந்த இடத்தை ஆய்வு செய்த போலீசார் எங்களை அறுத்தது நைலான் மாஞ்சா எனத் தெரிவித்தனர் என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்