ஜனவரி 7 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது. சம்பவம் நடந்த  இடத்திற்கு அருகில் உள்ள ஒரு கடையின் உரிமையாளர் கண்காணிப்பு கேமரா மூலம் இதனை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்


கடையின் உரிமையாளர் ஜோ இம்ப்ரியால், போலிஸாரிடம் தனது கடையில் இருந்த பாதுகாப்பு கேமராவை வைத்து விசாரணை செய்யும்படி கேட்டுக் கொண்டார். இம்ப்ரியால் -இன் பாதுகாப்பு கேமராவில் அனைத்தும் தெளிவாக பதிவாகியுள்ளது.  வீடியோவின் படி, மதியம் 2 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.


 






ஒரு வெள்ளை நிற கார் குப்பைத் தொட்டிக்கு அருகே சென்றது, காரிலிருந்து ஒரு பெண் வெளியேறி ஒரு கருப்பு பையை குப்பைத் தொட்டியில் வீசி விட்டு எவ்வித வருத்தமும் இன்றி அவள் புறப்பட்டு சென்றுவிட்டதாக இம்ப்ரியால் கூறினார்.


பின்னர் ஒரு குழுவினர் குப்பை தொட்டியை சோதனை இட்டதில் அதிலிருந்த கருப்பு நிற பையில் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து குப்பையில் இருந்த குழந்தையை மீட்ட சில நேரங்களிலேயே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சந்தேகத்திற்கு உரிய வாகனத்தை கண்டு பிடித்தனர்.






 


அந்த பெண் குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசியது குழந்தையில் தாயான, 18 வயது அலெக்சிஸ் அவிலா என்பவர். குழந்தையை வேறொரு இடத்தில் பெற்று எடுத்து, குப்பைத் தொட்டியில் வீசியதாக ஒப்புக்கொண்டார். மேலும் அவிலாவை கைது செய்த காவல்துறை அவர் மீதான வழக்கு விசாரணை திங்கள்கிழமை நடைபெறும் என தெரிவித்தனர்.


தற்போது அதிர்ஷ்டவசமாக, குழந்தை உயிருடன் மீட்கப்பட்டு டெக்சாஸ் மருத்துவமனையில் நலமாக உள்ளது.