BJP Candidates List 2022 : உ.பி சட்டமன்ற தேர்தல்: முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக.. கோரக்பூர் தொகுதியில் யோகி ஆதித்யநாத்!

உத்திரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

உத்திரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 58 தொகுதிகளில் 57 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

 

உத்தரபிரதேச மாநிலத்தின் கோரக்பூர் தொகுதியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போட்டியிடுகிறார். அதேபோல், அம்மாநில துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மௌரியா பிரயாக்ராஜின் சிரத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

 

 

முன்னதாக, உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்றும், முதல்கட்ட தேர்தல் பிப்ரவரி 10 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா தெரிவித்தார். 

அதேபோல், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 14ஆம் தேதியும், 3ஆம் கட்ட தேர்தல் பிப்.20ஆம் தேதியும், 4ஆம் கட்ட தேர்தல் பிப்.24ஆம் தேதியும், 5 ஆம் கட்ட தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதியும்,ஆறாம் கட்ட தேர்தல் மார்ச் 3ம தேதியும், 7ம் கட்டதேர்தல்  மார்ச் 7ம் தேதியும் நடைபெறுகிறது.

உத்தர பிரதேச சட்டபேரவை தேர்தலை பொறுத்தவரை பாஜக, சமாஜ்வாடி கட்சி மற்றும் காங்கிரஸ்கட்சிகளிடையே கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது. 

உத்தர பிரதேசம் தொடர்ந்து பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5  மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையையும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாலமேடு ஜல்லிக்கட்டு நேரலை :

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola