இந்தியாவின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது மறைவிற்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஊட்டி, வெலிங்டனில் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்த 13 பேரில் ஒருவர் ஜூனியர் வாரண்ட் அதிகாரியான பிரதீப்.
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பொன்னுக்காராவைச் சேர்ந்தவர் பிரதீப். 2002ம் ஆண்டு விமானப்படையில் சேர்ந்த பிரதீப் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றியுள்ளார். 2018ம் ஆண்டு கேரள வெள்ளத்தின் போது மண்ணின் மைந்தனாகவும், விமானப்படை அதிகாரியாகவும் பம்பரமாய் சுழன்றவர் பிரதீப். அவரின் அதிரடி மீட்பு நடவடிக்கையை பாராட்டி கேரள அரசு அவரை பெருமைப்படுத்தியது.
“ஒரு மருத்துவராக... சிகிச்சை பெற்று வரும் விமானி வருணை சந்தித்தேன்” - ஆளுநர் தமிழிசை பேட்டி!
தற்போது கோவையின் அருகே சில்லூரில் பணியாற்றிய அவர் அங்குள்ள ராணுவ வீரர்கள் குடியிருப்பில் மனைவி ஸ்ரீலெட்சுமி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். 37 வயதான பிரதீப் கடந்த 4 நாட்களுக்கு முன்னர்தான் தன்னுடைய மகனின் பிறந்தநாள் விழாவுக்கு வந்து பணிக்கு திரும்பியுள்ளார்.
மகனின் பிறந்தநாள் மட்டுமின்றி, உடல்நிலை சரியில்லாத தந்தையை பார்ப்பதற்காகவும் சொந்த ஊருக்கு வந்து சென்றுள்ளார். கடைசியாக தன்னுடைய தாயிடம் பேசிய பிரதீப், பாதுகாப்பு ஹெலிகாப்டரை இயக்கும் குழுவில் செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார். பிரதீப் இறப்பதற்கு 4 நாட்கள் முன்பு குடும்பத்தாருடன் இருந்ததை அவர் தாய் சோகத்துடன் நினைவுகூர்ந்துள்ளார். மகன் இறந்தது உடல் நிலை சரியில்லாத அவருக்கு தந்தைக்கு இதுவரை தெரியாது என்பது மேலும் சோகமாகவே உள்ளது.
முப்படை தலைமைத்தளபதி பிபின் ராவத் உடன் பயணித்தவர்களின் பட்டியல் :
மதுலிக்கா ராவத்
பிரிகேடியர் எல்.எஸ்.லிட்டெர்
லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங்
குருசேவக் சிங்
ஜிதேந்திர குமார்
விவேக் குமார்,
சாய் தேஜா,
ஹாவ் சத்பால்,
பைலட் விங் கேட் சவுகான்
ஸ்கூவாட்ரான் குல்திப்
JWO பிரதீப்
JWO தாஸ்
கேப்டன் வருண் சிங்
மேலும் படிக்க..
Next CDS of India: நாட்டின் அடுத்த தலைமைத் தளபதி யார்? - நீடிக்கும் குழப்பம்!
Mi-17 Black Box: விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப்பெட்டி கண்டுபிடிப்பு...
“ஒரு மருத்துவராக... சிகிச்சை பெற்று வரும் விமானி வருணை சந்தித்தேன்” - ஆளுநர் தமிழிசை பேட்டி!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்