லாரா தத்தாவின் சமீபத்திய திரைவரவு ‘ஹிக்கப்ஸ் அண்ட் ஹூக்கப்ஸ்’ (Hiccups And hookups) இதில் நடித்தது மிகவும் வேறுபட்ட அனுபவத்தை தந்ததாக அவர் குறிப்பிட்டார். இந்த தொடர் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. ‘இதற்கு முன்பு உடலுறவைக் குறித்து பேசும் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவை பெரும்பாலும் ஆண்களின் பார்வையில் அமைந்ததாகவே இருந்தது. உண்மையில் இந்தியாவில் பெண்கள் யாரும் உடலுறவில் ஈடுபடுவதில்லை என்ற எண்ணம்தான் இருக்கிறது’ என ஒரு நேர்காணலில் அவர் தெரிவித்தார். அப்படியெனில் யாருடன்தான் ஆண்கள் உடலுறவில் ஈடுபடுகிறார்கள்? அது பேசப்படுவதே இல்லை, அதை குறித்துப் பேச யாருக்கும் விருப்பம் இருப்பதில்லை.


இது எப்படி இருக்கிறதென்றால், ‘நீ உடலுறவில் ஈடுபடுகிறாய் என்றால் சரிதான், ஆனால் உன்னுடையதை போர்வைக்குள்ளே வைத்துக்கொள்’ என்று சொல்வது போல் இருக்கிறது என்று அவர் தெரிவித்திருந்தார்.



இந்த தொடரில் 40 வயது மதிக்கத்தக்க பாத்திரம் கிடைத்ததற்கும் பேசப்படாத விஷயங்களை அதன் மூலம் பேச முடிந்ததற்கும் அவர் நன்றிக்கடன் பட்டிருப்பதாக தெரிவித்தார். நீனா குப்தா, ரத்னா பதக் ஷா போன்றோர் தன்னுடைய முன்மாதிரிகள் எனவும் அவர்களுடைய திரைப்படங்கள், திருமணம், குழந்தைகள், விவாகரத்து போன்ற விஷயங்களைத் தாண்டி இருக்கும் பெண்களின் வாழ்வியலைக் காட்டி இருப்பதாகவும் அவர் கூறினார்.


இந்த தொடரில் நடிப்பதற்கு முன்பு தன்னுடைய மகள் இதை எவ்வாறு எடுத்துக் கொள்வார் என்ற கவனம் தனக்கு இருந்ததாக அவர் குறிப்பிட்டார். தன்னுடைய கணவருடன் சேர்ந்து தான் இந்த முடிவை எடுத்ததாகவும், தங்களுடையது ஒரு முற்போக்கான குடும்பம் என கருதுவதாகவும் அவர் கூறியிருந்தார். பால், பாலீர்ப்பு குறித்த கல்வி பள்ளிகளில் கற்பிக்கப்பட்டாலும் அது போதாமல் இருக்கிறது என் அவர் தெரிவித்தார். தன்னுடைய மகள் நான்கு வயதாக இருக்கும்போது, விவாகரத்தைக் குறித்து தெரிந்துகொள்ள ஆசைப்பட்டாள் எனவும் இப்போது ஒன்பது வயதாகும்போது விபச்சார விடுதி என்றால் என்ன என்று கேட்கிறாள் எனவும் அவர் தெரிவித்தார்.


பொறுப்புள்ள தாயாக இவற்றைக் குறித்து பொய் கூற தனக்கு விருப்பம் இல்லை எனவும், இவற்றைக் குறித்து தனது மகளிடம் பேசவும் அவற்றைப் புரிந்துகொள்ள அவளுக்கு உதவுவதும் தன்னுடைய கடமை என்று அவர் தெரிவித்தார்.


மேலும் படிக்க..


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்