நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

  


இந்த நாட்டில், மக்களும் பாதுகாப்பாக இல்லை; பாதுகாப்புப் படையும் பாதுகாப்பாக இல்லை; உள்துறை என்னதான் செய்கிறது? - என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.  






நாகாலாந்தில் கிளர்ச்சியாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் தொழிலாளர்கள் உட்பட்ட 13 பேர் உயிரிழந்தனர். மியான்மர் சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள நாகாலாந்து மோன் மாவட்டத்தில் கிளர்ச்சியாளர்கள் நடமாடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்திய பாதுகாப்புப் படையினர் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டன . இந்நிலையில், Tiru-Oting என்ற சாலையில் வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த பழங்குடியின தொழிலாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். 


தவறுதலான துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட இந்த உயிரிழப்புகள் மிகுந்த வருத்தம் அளிப்பதாக இந்தியா ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், " கிளர்ச்சியாளர்களின் நடமாட்டம் குறித்து கிடைந்த நம்பகமான உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில், நாகாலாந்து, மோன் மாவட்டத்தில் பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகள் மேகொள்ளப்பட்டது. ஆனால், அதன் பின் நடந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கக் கூடியது" என்று தெரிவித்தது.  


மேலும், இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து உயர்மட்ட அளவில் விசாரிக்கப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த சம்பவத்தில், பாதுகாப்பு படையைச் சேர்ந்த பலர் மோசமான காயம் அடைந்ததாகவும், படை வீரர் ஒருவர் உயிரிழந்ததாகவும்" தெரிவித்தது. 


 






 


இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா “இந்த சம்பவத்தை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். இச்சம்பவம் தொடர்பாக மாநில அரசு உயர் மட்ட அளவிலான சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விரிவான விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வழி செய்யும்” என குறிப்பிட்டுள்ளார்


மேலும் படிக்க..


TN Governor RN Ravi: டெல்லி விரைந்தார் தமிழ்நாடு ஆளுநர் ரவி.. நாகாலாந்து துப்பாக்கிச்சூடு காரணமா?


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்