கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. 


தமிழகத்துக்கு காவிரி நீர்வரத்து 57,000 அடியாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து 65,000 கன அடியிலிருந்து 57,000 கன அடியாக குறைந்துள்ளது.


 
தமிழகத்துக்கு நீர்திறப்பு 18, 156 கன அடியாக குறைப்பு:


கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 34,594 லிருந்து 18,156 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.


கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 13,156 அடி நீரும், கபினி அணையில் இருந்து 5000 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.


மேட்டூர் அணை நில்வரம்:


மேட்டூர் அணையில் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி. யாகவும் நீடிக்கிறது. நீர்வரத்து 65,000 கன அடி, 16 கண் மதகு பாலம் வழியாக 42,0000 கன அடி, அணை,சுரங்க மின் நிலையம் வழியாக 23,000 கன அடி என 65,000 கன அடி நீர் திறக்கப்படுக்றது.


கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்காக விநாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.




மேலும் வாசிக்க..


Indonesia Earthquake : ரிக்டர் அளவு 5.8.. இந்தோனேசியாவை அதிரவைத்த நிலநடுக்கம்..


இரண்டாம் நாளாக 65,000 கன அடியாக நீடிக்கும் மேட்டூர் அணையின் நீர் வரத்து


The Royal Family Reunion: குடும்ப சர்ச்சைகளுக்கு நடுவே சர்ப்ரைஸ்...எலிசபெத்துக்கு ஒன்றாக அஞ்சலி செலுத்த வந்த வில்லியம் கேட், மேகன் ஹாரி தம்பதி!