இந்தோனேசியாவின் பரிமன் அருகே மேற்கு சுமத்ராவில் திங்கள்கிழமை அன்று 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது. 11.9 கிமீ (7.39 மைல்) ஆழம் வரை நிலநடுக்கம் பதிவானது.


 






முன்னதாக, டிசம்பர் 14, 2021 அன்று இந்தோனேசியாவில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் நாட்டின் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டிருந்தது. இந்தோனேசிய அலுவலர்கள் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கணித்தனர். இது புளோரஸ் கடலில் கிழக்கு நுசா தெங்கரா பகுதியை தாக்கியது.


இதேபோல, செப்டம்பர் 28, 2018 அன்று இந்தோனேசியாவின் கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் சுனாமியைத் தூண்டியது. இதன் காரணமாக சுலவேசி தீவில் சுமார் 1.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பேரழிவு 2000 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். சுமார் 2 லட்சம் பேர் இடம்பெயர நேர்ந்தது என யுனிசெஃப் தெரிவித்துள்ளது.


 






2004இல் சுமத்ரா கடற்கரையில் 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட சுனாமியால் இந்தோனேசியாவில் சுமார் 1,70,000 பேர் உள்பட பிராந்தியம் முழுவதும் 220,000 இறந்தனர். வரலாற்றின் மிக மோசமான இயற்கை பேரழிவாக இது கருதப்படுகிறது.


பசிபிக் பகுதியில் இந்தோனேசியா அமைந்திருக்கும் இடம் காரணமாக அடிக்கடி நிலநடுக்கமும் எரிமலை வெடிப்பும் ஏற்படுகிறது. இந்தோனேசியா அமைந்திருக்கும் இடம் "ரிங் ஆஃப் ஃபயர்" எனக் கூறப்படுகிறது. இது ஒரு வளைவு பகுதியாகும். இங்கு தீவிர நில அதிர்வுகள் அடிக்கடி ஏற்படும். ஜப்பானில் இருந்து தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் படுகை முழுவதும் இது நீண்டுள்ளது.