இந்தியா படிப்படியாக ஒரு சீரான பாலின விகிதத்தை நோக்கி நகர்ந்துள்ளது என்றாலும் கடந்த இருபது ஆண்டுகளில் 90 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் சிசுக்கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று ஒரு பகீர் அறிக்கை கூறுகிறது.


90 லட்சம் பெண் சிசுக்கொலை


ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 2019-2021 இன் படி பாலின விகிதம் 100 பெண் குழந்தைகளுக்கு 108 ஆண் குழந்தைகள் என்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011ல் இதில் ஆண் குழந்தைகள் விகிதம் 111 ஆக இருந்தது. அதில் இருந்து சிறிய முன்னேற்றம் கண்டுள்ளது. இருப்பினும், 1950 ஆம் ஆண்டில் இந்த விகிதம் 100 பெண் குழந்தைகளுக்கு 105 ஆண் குழந்தைகள் என்று இருந்ததால் இன்னும் முன்னேற்றம் காணவேண்டிய நிலையில்தான் உள்ளோம். 105 என்பது ஏறக்குறைய இயற்கையாக ஆண்-பெண் குழந்தைகள் பிறக்கும் விகிதம் என்று பியூ ஆராய்ச்சி மையத்தால் தயாரிக்கப்பட்ட ஆய்வு கூறுகிறது. 1970 களில் பெற்றோர்களால் வயிற்றில் இருப்பது என்ன குழந்தை என்பதை கண்டறியும் தொழில்நுட்பம் வந்ததில் இருந்து நாட்டில் பாலின விகிதம் மாறியது. அது தேர்ந்தெடுக்கப்பட்ட கருக்கலைப்புகளை எளிதாக்கியது. இந்த பிரச்சினையை களைய அரசாங்கம் பல ஆண்டுகளாக முயற்சி எடுத்து வருகிறது. மத்திய அரசின் பாலினத்தை முடிவு செய்தல் தடைச் சட்டத்தின்படி (1994), கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று சோதனை செய்து தெரிந்துகொள்வது, ஸ்கேன் மூலம் கண்டறிவது, ஸ்கேன் மையங்கள் அல்லது மருத்துவர் அதற்கு உதவுவது ஆகியவை தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இந்த சட்டம் 1994ல் கொண்டுவரப்பட்டது.



பல திட்டங்களுக்கு பின் சிறிய மாற்றம்


அதன்பிறகு முக்கியமாக உத்தரபிரதேசம், ஹரியானா, உத்தரகண்ட், பஞ்சாப், பீகார் மற்றும் டெல்லி ஆகிய நாடுகளில் 405 மாவட்டங்களை குறிவைத்தது பேட்டி பச்சாவ், பேட்டி பதாவோ (பிபிபிபி) திட்டம் 2015 இல் தொடங்கப்பட்டது. பல பிராந்திய அரசாங்கம் பெண்குழந்தைகள் பிறந்தால் அவர்களுக்கு பல சலுகைகளும், மானியங்களும் வழங்கப்பட்டன. அவர்களை வளர்க்க அரசாங்கம் நிதித்தொகை, திருமண உதவித்தொகை, என்றெல்லாம் கொண்டு வந்தார்கள். இவற்றின் காரணமாக முன்னேற்றம் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தாலும், பாலின சமநிலையில் ஏற்பட்ட மாற்றம் பெரிதாக களையப்படவில்லை. 2000 மற்றும் 2019 க்கு இடையில், சுமார் 9 மில்லியன் (90 லட்சம்) பெண் சிசுக்கள் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.


தொடர்புடைய செய்திகள்: உயர்ந்தது மின்கட்டணம்! எத்தனை யூனிட்டுக்கு எவ்வளவு விலை உயர்வு தெரியுமா? முழு விவரம்!


இந்துக்கள் அதிகம்


இந்த நூற்றாண்டு துவக்கத்திலேயே இந்தியா பாலின விகிதத்தில் சமநிலை குன்றிய நாடாகவே இருந்தது. அஜர்பைஜான், சீனா, ஆர்மீனியா, வியட்நாம் மற்றும் அல்பேனியா மட்டுமே அதில் சமநிலை கொண்டிருந்தன. பகுப்பாய்வின்படி, புதிதாக பிறந்த பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 2010 ல் சுமார் 480,000 இலிருந்து 2019 ல் 410,000 ஆக குறைந்தது. ஒரு மத-வாரியாக பிரித்தால் இதில் அதிக பெண் சிசுக்கொலை செய்த மதத்தினராக இந்துக்களைக் காட்டுகிறது. 86.7 சதவிகிதம் பெண் சிசுக்கொலைகள் இந்து மதத்தினரால் செய்யப்பட்டுள்ளது. அதாவது 7.8 மில்லியன் (78 லட்சம்) பெண் குழந்தைகள் சிசுக்கோலை செய்யப்பட்டுள்ளனர்.



மத வாரியாக


இந்த பட்டியலில் சீக்கியர்களின் முன்னேற்றம் கவனிக்கத்தக்கது. ஆன் குழந்தைதான் வேண்டும் என்று 1998-1999 ஆம் ஆண்டில், 30 சதவீத சீக்கிய பெண்கள் விரும்பினர். ஆனால் தற்போது 2019-2021 ஆம் ஆண்டில் அது 9 சதவீதமாக குறைந்துள்ளது. இதேபோன்ற போக்கு மற்ற மதக் குழுக்களிடையேயும் அதே காலத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 34 சதவீத இந்து மற்றும் முஸ்லீம் பெண்கள் ஆண் குழந்தையை விரும்பினர். இது முறையே 15 சதவீதம் மற்றும் 19 சதவீதமாக குறைந்துள்ளது. 20 சதவீத கிறிஸ்தவ பெண்கள் ஆண் குழந்தையை விரும்பினர். அது இப்போது 12 சதவீதமாகக் குறைந்துவிட்டது. ஒப்பிடுகையில், பெண் குழந்தைகளை விரும்பும் பெண்களின் விகிதம் அனைத்து மதங்களிலும் சாதாரணமாக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி பொதுவாகவே கருவுறுதல் விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. பலர் இந்த காலத்தில் ஒரு குழந்தையை மட்டுமே விரும்புவதால் அந்த ஒரு குழந்தையும் ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடையே இருக்க வாய்ப்புகள் அதிகம். அதனாலும் சிசுக்கொலைகள் அதிகரித்திருக்கலாம் என்று கூறுகிறார்கள்.