Karnataka CM Swearing-In Ceremony LIVE: கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றார் சித்தராமையா
Karnataka CM Swearing-In Ceremony LIVE Updates: கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்கும் நிகழ்ச்சியின் தகவல்களை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக் மூலம் அறிந்து கொள்ளலாம்.
பதவியேற்பு விழாவில் பங்கேற்ற தலைவர்கள், காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் அளித்த 5 முக்கிய வாக்குறுதிகள் இன்றே நிறைவேற்றப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.
கர்நாடக தேர்தல் முடிவின் மூலம் பாஜகவின் வெறுப்பு அரசியல் முறியடிக்கப்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.
பாஜக சொல்வது ஒன்று; செய்வது ஒன்று; ஆனால் நாங்கள் சொல்வதை செய்வோம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசு மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றும் என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.
பாஜகவின் பணம், அதிகார பலத்தை தாண்டி காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்றுள்ளது என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.
கர்நாடக அமைச்சராக பரமேஸ்வரா, கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், பாட்டீல், சதீஷ் ஜர்கிஹோலி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஷமீர் அகமது கான் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
கர்நாடகாவின் 8 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
கர்நாடக மாநில துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்றார்.
இரண்டாவது முறையாக கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றார் சித்தராமையா. பெங்களூரு கண்டீரவா அரங்கில் கர்நாடக முதல்வராக பதவியேற்றார் சித்தராமையா
கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா, துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமார் பதவியேற்றனர். ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா, துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமார் பதவியேற்கின்றனர். இரண்டாவது முறையாக கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ளார் சித்தராமையா
கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றுள்ளார்.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல், இமாச்சல முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி உள்ளிட்டோரும் விழாவில் கலந்து கொண்டனர்.
சித்தராமையா பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்பு
கர்நாடக அமைச்சரவை பதவியேற்பு விழாவில் குவிந்த காங்கிரஸ் தொண்டர்கள் - விழா நடைபெறும் கன்டீரவா மைதானம் முழுவதும் தொண்டர்களால் நிரம்பி வழிகிறது.
கர்நாடக அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பங்கேற்க பெங்களூரு வந்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது - மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நேரில் வரவேற்றார்.
கர்நாடக அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் பெங்களூரு புறப்பட்டார்.
கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்க உள்ள நிலையில் பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே அவரது ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம் - இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கர்நாடகா முதலமைச்சராக 2வது முறையாக சித்தராமையா பதவியேற்கிறார். முன்னதாக கடந்த 2013 - 2018 ஆம் ஆண்டு ஆட்சி காலத்தில் அவர் முதலமைச்சராக பதவி வகித்திருந்தார்.
கர்நாடகா அரசின் புதிய அரசில் இன்று பரமேஸ்வரா, கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், பாட்டீல், சதீஷ் ஜர்கிஹோலி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஷமீர் அகமது கான் ஆகிய 8 அமைச்சர்கள் தான் பதவியேற்கின்றனர்.
கர்நாடகாவில் இன்று அமைச்சர்களாக பதவியேற்பவர்களின் பட்டியல் வெளியானது. முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டவர்களுடன் 8 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்கின்றனர்.
கன்டீரவா மைதானத்தில் நடக்கும் பதிவியேற்பு விழாவில் முதலமைச்சராக சித்தராமையா, துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் மற்றும் 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் புதிய முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்பு - இந்நிகழ்ச்சியில் ராகுல்காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு
Background
நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக மாநில தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் கடந்த 13ஆம் தேதி வெளியாகியது. காங்கிரஸ் கட்சி பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதில், 224 சட்டமன்ற தொகுதிகளில், காங்கிரஸ் 135, பாஜக 66, மதசார்பற்ற ஜனதா தளம் 19, மற்றவை 4 தொகுதகளில் வெற்றி பெற்றது.
முதலமைச்சரை தேர்வு செய்வதில் இழுபறி:
காங்கிரஸ், தனிப்பெரும்பான்மை பெற்றாலும், அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வதில் தொடர் இழுபறி நீடித்தது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் இடையே முதலமைச்சர் பதவிக்கு கடும்போட்டி நிலவி வந்தது.
இப்படி இருக்கும் நிலையில், நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சித்தராமையா மற்றும் சிவக்குமார் தனித்தனியாக சந்தித்து பேசினர். இதனை அடுத்து, நேற்று ராகுல் காந்தியையும் இருவரும் தனித்தனியாக சந்தித்து முதல்வர் பதவி பற்றி பேசியிருந்தனர்.
காங்கிரஸ் ஃபார்முலா:
இதற்கு பிறகு, முதலமைச்சர் பதவி சித்தராமையாவுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. துணை முதலமைச்சர் பதவியை ஏற்க டி.கே.சிவக்குமார் ஒப்பு கொண்டார். இருப்பினும், முதல் இரண்டு ஆண்டுகள் மட்டும் சித்தராமையா, முதலமைச்சராக தொடர்வார் என்றும் அதன் பிறகு, முதலமைச்சர் பதவி சிவக்குமாருக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஒரு வழியாக முதலமைச்சர் பதவிக்கான போட்டி முடிவுக்கு வந்த நிலையில், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், சித்தராமையா, காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சித்தராமையா.
முதலமைச்சர் பதவியேற்பு விழா:
இந்தநிலையில், இன்று பெங்களூருவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் முதலமைச்சராக சித்தராமையா, துணை முதலமைச்சராக சிவக்குமாரும் பதவியேற்கின்றனர். மதியம் 12:30 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -