மாலை மாற்றும்போது மணமகனின் கைபட்டதால் மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார். இதனால், மணமகன் அதிர்ச்சி அடைந்தார். கர்நாடக மாநிலம் பெல்தங்கடி மாவட்டத்தில் உள்ள நாராவியில் இந்த விநோதமான சம்பவம் நடந்தது.


கைப்பட்டதால் நின்ற திருமணம்


மூடுகோணாஜேவைச் சேர்ந்த பெண்ணுக்கும் நாராவியைச் சேர்ந்த ஆணுக்கும் மே 25-ஆம் தேதி நாராவியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. 500-க்கும் மேற்பட்ட விருந்தினர்களுக்கு திருமண மதிய உணவு தயார் செய்யப்பட்டது. திருமண சம்பிரதாயங்கள் முடிவடைந்த நிலையில், அய்யர் தம்பதியரை மாலைகளை மாற்றிக்கொள்ளச் சொன்னார். அதன்படி மணமகன் மணமகளுக்கு மாலை அணிவித்து கொண்டிருந்தார்.


மேலும் படிக்க: Rajasthan: வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் மாமியார் பெயர்! காணாமல் போன 3 மருமகள்கள் - விசாரணையில் திடுக் தகவல்கள்!


மணமகள் திடீரென்று ஆத்திரமடைந்து மாலையை எறிந்துவிட்டு மண்டபத்தை விட்டு வெளியேறினார். மணமகனின் கை கழுத்தை வருடியதால் திருமணம் செய்ய மறுத்துவிட்டதாக தெரிவித்தார் என தகவல் தெரியவந்துள்ளது


மேலும் படிக்க: Sidhu MooseWala: எதார்த்தமா? மர்மமா? மரணத்தை முன்பே கணித்தாரா சித்து? பாடல் வரி கொடுத்த ஷாக்!


மணமகன் வீட்டார் அவமானம்


மணமகளின் உறவினர்கள் அவரை சமாதானம் செய்தனர். இருப்பினும், மணமகன் தரப்பினர் மணமகள் ஒப்புக்கொள்ளாததால் திருமணத்தை நிறுத்தினார்கள். மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வேனூர் போலீசார் தலையிட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த போலீசார் ஏற்பாடு செய்தும், உடன்பாடு ஏற்படாததால், திருமணம் ரத்து செய்யப்பட்டது.


மேலும் படிக்க: South West Monsoon: கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை - தமிழகத்திற்கு மழை வாய்ப்பு எப்படி?


500 விருந்தினர்களுக்குத் தயாரிக்கப்பட்ட திருமண மதிய உணவு உள்ளூர் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது. மணமகனின் கைப்பட்டதால் மணமகள் திருமணத்தை நிறுத்தியது அந்தப் பகுதி மக்களிடையே ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: Uttar Pradesh : பெண்களுக்கு நைட் ஷிப்ட் போட்டா நாக் அவுட்தான்.. எச்சரித்த உ.பி அரசு!




 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண