பெண்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை பெண்கள் பணியாற்றத் தடை விதிப்பதாக உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.

யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு சனிக்கிழமை (நேற்று) வெளியிட்ட உத்தரவில், மாநிலம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதற்காக மாநிலம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் எந்த ஒரு பெண் ஊழியர்கள் இரவு ஷிப்ட் செய்யக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதுகுறித்து உத்தரபிரதேச அரசு வெளியிட்ட அறிக்கையில், "எந்த ஒரு பெண் ஊழியர்களும் காலை 6 மணிக்கு முன்பும், மாலை 7 மணிக்குப் பிறகும் அவரது எழுத்துப்பூர்வ அனுமதியின்றி பணிபுரியக் கூடாது. மேற்கூறிய நேரங்களில் பணிபுரிந்தால், அதிகாரிகள் இலவச போக்குவரத்து, உணவு மற்றும் போதுமான கண்காணிப்பை வழங்க வேண்டும்" என்று அரசு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பெண் ஊழியர்கள் காலை 6 மணிக்கு முன்பாகவும், மாலை 7 மணிக்குப் பின்னும் பணி செய்ய மறுத்தால், அவர் வேலையில் இருந்து நீக்கப்படமாட்டார் என்ற முடிவை அறிவிக்குமாறு உ.பி தொழிலாளர் துறை மாநில அரசாணையை வெளியிட்டது.


பெண் ஊழியர்கள் காலை 6 மணிக்கு முன் பணிக்கு அழைக்கப்படமாட்டார்கள் என்றும் இரவு 7 மணிக்கு மேல் வேலைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் இல்லை என்றும், அவர்களின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எழுத்துப்பூர்வ சம்மதமின்றி குறிப்பிட்ட நேரத்தில் பெண்கள் பணிபுரியக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரவில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு இலவச போக்குவரத்து, உணவு வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் இருப்பது உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண