தற்கொலை..
ஒரே குடும்பத்தில் திருமணமான மூன்று சகோதரிகள், இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டதால், ராஜஸ்தானில் ஒரு சோகமான தற்கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தைகளில் ஒன்று 4 வயது சிறுவன் மற்றொன்று 27 நாட்களே ஆன கைக்குழந்தை. மோசமான விஷயம் என்னவென்றால், இறக்கும் போது இரண்டு பெண்கள் கர்ப்பமாக இருந்தனர்.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டம் சாபியா டுடு கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்களுடன் கலு மீனா (வயது 25), மம்தா (23), மற்றும் கமலேஷ் (20) ஆகிய பெண்கள் திருமணம் செய்து கொண்டனர். வரதட்சணை கேட்டு மாமியார் அடிக்கடி துன்புறுத்துவதாகவும், அடித்து துன்புறுத்துவதாகவும் அவர்களது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
“எனது சகோதரிகள் வரதட்சணைக்காக அடிக்கடி அடிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். மே 25 அன்று அவர்கள் காணாமல் போனபோது, அவர்களைக் கண்டுபிடிக்க நாங்கள் ஓடினோம். உள்ளூர் காவல் நிலையத்திலும், மகளிர் உதவி எண்ணிலும், தேசிய ஆணையத்திலும் வழக்குப் பதிவு செய்தோம். ஆனால் மிகக் குறைந்த உதவியைப் பெற்றோம்” என்று அவர்களது உறவினர் ஹேம்ராஜ் மீனா கூறினார்.
வாட்ஸ் அப்
இறந்தவர்களின் இளைய சகோதரி கமலேஷ் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்ஸில், “நாங்கள் இப்போது செல்கிறோம், மகிழ்ச்சியாக இருங்கள், எங்கள் மரணத்திற்கு காரணம் எங்கள் மாமியார். தினமும் இறப்பதை விட ஒருமுறை சாவதே மேல். அதனால் ஒன்றாக இறப்பது என்று முடிவு செய்தோம்.அடுத்த ஜென்மத்தில் மூவரும் ஒன்றாக இருப்போம் என்று நம்புகிறோம். நாங்கள் சாக விரும்பவில்லை ஆனால் மாமியார் எங்களை துன்புறுத்துகிறார்கள். எங்கள் இறப்புக்கு எங்கள் பெற்றோரைக் குறை கூறாதீர்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.பெண்கள் காணாமல் போன நான்கு நாட்களுக்குப் பிறகு, நேற்று காலை டுடு கிராமத்தில் உள்ள கிணற்றில் இருந்து பலியான மூன்று பேரின் உடல்கள் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்களை போலீசார் மீட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களின் கணவர்கள் மற்றும் மாமியார் மீது கொடுமை உள்ளிட்ட குற்றங்களுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வரதட்சணை மரணம் தொடர்பான வழக்கு இப்போது அசல் எஃப்ஐஆரில் சேர்க்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். இந்த மரணம் தொடர்பாக மூன்று கணவர்கள், மாமியார் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தானில் உள்ள சமூக ஆர்வலர்கள், இந்த வழக்கு தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது போன்ற ஒரு வழக்கில் ராஜஸ்தான் வெட்கப்பட்டு தலை குனிய வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் பெண்களின் உடல்களை மீட்க 4 நாட்கள் எடுத்துக் கொண்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்