News Today Live: தமிழ்நாட்டில் 1,233 பேருக்கு கொரோனா தொற்று 15 பேர் உயிரிழப்பு!

News Today LIVE in Tamil: தமிழ்நாடு, இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 16 Oct 2021 08:08 PM
தமிழ்நாட்டில் 1,233 பேருக்கு கொரோனா தொற்று 15 பேர் உயிரிழப்பு!

Corona Update : தமிழ்நாட்டில் 1,233 பேருக்கு கொரோனா தொற்று 15 பேர் உயிரிழப்பு!





நர்சரி பள்ளிகள் குறித்து வெளியான அறிவிப்பு தவறாக வெளிவந்துள்ளது - அமைச்சர் அன்பில் மகேஷ்

ப்ளே ஸ்கூல், எல்.கே.ஜி., யூ.கே.ஜி, உள்ளிட்ட நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது என்றும் இது குறித்த தெளிவான அறிக்கை ஒரிரு நாட்களில் வெளியடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

நீலகிரி, கோவை, தேனியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், திருச்சி, கரூர் மாவட்டங்களிலும், சென்னையில் இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க சசிகலா மரியாதை

ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க சசிகலா மரியாதை செலுத்தினார். அதிமுகவின் பொன்விழா நாளை தொடங்க உள்ள நிலையில் கண்ணீருடன் மரியாதை செலுத்தினார்.

சுதாகரன் சிறையில் இருந்து விடுதலையானார்

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சுதாகரன் விடுதலையானார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சுதாகரன் 89 நாட்களுக்கு முன்னதாகவே விடுதலை ஆகியுள்ளார்.

கோயிலில் சசிகலா சாமி தரிசனம்

ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்த சென்றுக்கொண்டிருந்த சசிகலா, வழியில் சீனிவாசா பத்மாவதி கோயிலில்  சசிகலா சாமி தரிசனம் செய்தார்

மரியாதை செலுத்த சசிகலா புறப்பட்டார்

ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சசிகலா புறப்பட்டார். அதிமுக கொடியுடன் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் சசிகலா இன்று மரியாதை செலுத்துகிறார்.

Background

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா, ஜெ., மறைவுக்குப் பின் சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்றார். இதற்கிடையில் அதிமுகவின் தலைமையில் மாற்றம் ஏற்பட்டு, எடப்பாடி பழனிச்சாமி-ஓபிஎஸ் ஆகியோர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டனர், செயல்படுகின்றனர். இந்நிலையில் சிறையிலிருந்து விடுதலையான சசிகலா, அதிமுகவை கைப்பற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் போனது. அவர் எதிர்பார்த்த ஆதரவு கட்சியில் கிடைக்காததால் தேர்தல் சமையத்தில் ஒதுங்கியிருப்பதாக அறிக்கை விட்டார் சசிகலா. 


தேர்தல் நிறைவுபெற்று, அதிமுக தோல்வியை தழுவிய பின் மீண்டும் அரசியல் பிரவேசத்தை தொடங்கிய சசிகலா பல்வேறு முயற்சிகளை முன்வைத்தார். ஆடியோ வெளியீடு, தொண்டர்கள் சந்திப்பு என அவர் செய்த அத்தனை முயற்சியும் அதிமுகவை கைப்பற்ற பலனளிக்கவில்லை. இந்நிலையில் அதிமுக பொன்விழா ஆண்டை கொண்டாட அதிமுக தலைமை முடிவு செய்து, அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியது. அதே நேரத்தில், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மீண்டும் தனது காய் நகர்த்தும் பணியை முன்னெடுக்க தயாரானார் சசிகலா. தோல்வியை காரணம் காட்டி தொண்டர்களை அரவணைக்கலாம் என்பது அவரது திட்டம்.


அதற்காக இன்று சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதாவின் நினைவிடங்களுக்கு மரியாதை செலுத்தச் செல்கிறார் சசிகலா. சிறைக்கு சென்று சசிகலா திரும்பிய போது, அப்போது ஆளும் அரசாக இருந்த எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு, நினைவிடத்திற்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் சசிகலா அங்கு செல்ல முடியாமல் தவித்தார். தற்போது திமுக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் முறையான அனுமதி பெற்று, இன்று மெரினா செல்கிறார் சசிகலா. தனக்கு அச்சுறுத்தல் இன்றி பாதுகாப்பு வழங்கவும் முன்பு போலீசாரிடம் சசிகலா தரப்பில் மனுவும் அளிக்கப்பட்டிருந்தது. 


இந்நிலையில், சசிகலாவின் அரசியல் பிரவேசம் முதல் தற்போது வரை ‛தியாகத் தலைவி’ என்கிற பட்டத்தில் தான் சசிகலா தன்னை முன்னிலைப்படுத்தினார். ஜெயலலிதாவிற்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்து கடைசி வரை அவருடன் பணியாற்றினார் என்பதை குறிப்பதற்காக இந்த சொல்லாடல் பயன்படுத்தப்பட்டது.


இதற்கிடையில் சில நாட்களுக்கு முன் பேஸ்புக்கில் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஒரு பதிவு போட்டிருந்தார். அதில், ‛தியாகம்’ என்கிற வார்த்தையை சசிகலா நீக்க வேண்டும் என்றும், கட்சியை தியாகம் செய்வதாக அந்த அர்த்தம் வரலாம் என்கிற முறையில் அந்த பதிவு இருந்தது. 


இந்நிலையில் இன்று மெரினா கடற்கரை செல்லும் சசிகலா குறித்த செய்தி அவரது அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியில் காலையில் இருந்து ஒளிபரப்பாகி வந்தது.


அதில் வழக்கமாக பயன்படுத்தும் ‛தியாகத் தலைவி’ என்கிற பட்டத்திற்கு பதில், ‛புரட்சித் தாய்’ என்கிற பட்டத்தை பயன்படுத்தி செய்தி வெளியாகிறது. இதன் மூலம் இன்று முதல், தன் பட்டத்தை மாற்றியிருக்கிறார் சசிகலா. கட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும் முன் தன்னிலிருந்து மாற்றத்தை தொடங்கியிருக்கிறார் சசிகலா. 


புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி என்கிற பட்டத்துடன் ஜெயலலிதா அழைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புரட்சித் தாய் என்கிற பட்டத்தை சசிகலா தனக்கு சூட்டிக்கொண்டுள்ளார். 









 



 



 

 

 





 


 

 



 

 



 




 







- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.