தென்கொரியாவில் 181 பேருடன் பயணித்த விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 177 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


ஜேஜூ ஏர் நிறுவனத்தின் விமானம் ஒன்று 175 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் என 181 பேர் பயணித்துள்ளனர். இந்த விமானம் தாய்லாந்தில் இருந்து வந்துள்ளது. தென்கொரியாவின் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுபாதையில் இருந்து விலகி சென்று சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. 


இதில் விமானத்தில் பயணித்த 177 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விமானம் போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 737 - 800 ரக விமானம் என்று ஜேஜூ ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 


 






விமான பயணிகளில் 173 பேர் தென் கொரியர்கள், 2 பேர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. 


கடந்த வாரம் கஜகஸ்தானின் அக்தாவ் அருகே நடந்த அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமான விபத்துக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த விபத்தில் விமானத்தில் இருந்த 67 பேரில் 38 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் மற்றவர்கள் அனைவரும் காயமடைந்தனர்.