நாட்டு மக்களிடம் உரையாற்றிய மோடி
ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக் கிழமையில் பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் இறுதி மன் கி பாத் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது இல்லத்தில் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களோடு இணைந்து கேட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் எல்.முருகன் ;
பிரதமர் நரேந்திர மோடி தேச மக்களிடையே மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று மனதில் குரல் நிகழ்ச்சி மூலம் கலந்து கொண்டுள்ளார். இது 117 ஆவது நிகழ்ச்சி. இன்றைய நிகழ்ச்சியில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75 ஆவது ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் அதன் முக்கியத்துவத்தை இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுவது பற்றி பேசினார்.
Creative economy பற்றி மிக விளக்கமாக பேசினார். சினிமா, gaming, மீடியா துறைகள் எந்த அளவுக்கு இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு, வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் துறையாக உள்ளது என பிரதமர் கூறியுள்ளார்.
WAVES என்று சொல்லும் மிகப் பெரிய கூடுதல் முதல் முறையாக நடைபெற உள்ளது. ஒருங்கிணைந்த உலக அளவிலான சம்மிட் 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது அதற்கான தயாரிப்பு பற்றி பேசி உள்ளார்.
மக்கள் பங்களிப்புடன் மிகப்பெரிய மாற்றத்தை சுற்றுச் சூழல் மூலமாக உருவாக்க வேண்டும். பிரதமர் மோடி மலேரியா ஒழிப்பு முன்னேற்பாடு, பொதுமக்கள் செய்யும் தலை சிறந்த பணி போன்ற பல விஷயங்களை மனதின் குரல் மூலம் எடுத்துக் சொல்லியுள்ளார்.
நீதி கிடைக்கும் வரை போராடுவோம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்க சம்பவம். பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக அரசு தூக்கி எறியப்படும் வரை மிகப் பெரிய சபதத்தை தமிழக மாநில தலைவர் எடுத்துள்ளார். திமுக அரசு குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்.
மாநிலத் தலைவர் இதற்காக பெரிய சபதத்தை எடுத்து ஆறுபடை வீடுகளுக்கு செல்வதாக அறிவித்திருக்கிறார். அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம். குற்றவாளி யாராக இருந்தாலும் அவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். முறையான விசாரணை நடத்திய குற்றவாளியை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரே நாள் விசாரணையில், ஒருவர்தான் குற்றவாளி என இல்லாமல் முழுமையாக நீதி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட வேண்டும். சட்டத்தின் முன் அவர்களை நிறுத்தி அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.
FIR வெளியானது அவமானம்
FIR வெளியானது அவமானம் கூடிய விஷயம். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்கிற பேச்சே இல்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகப் பெரிய கேள்விக் கூறியாக இருக்கிறது. எங்கு சென்றாலும் கஞ்சா இருக்கிறது. நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக ஒரு ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். பாஜக மற்றும் நரேந்திர மோடி அவர்கள் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது கொடுத்ததே அவர் தான்.
அம்பேத்கர் பிறந்த இடம், மறைந்த இடம் லண்டனில் படித்த இடம், மும்பையில் இருந்த இடம் அனைத்தையும் வாங்கி நினைவிடம் கட்டியிருக்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக நியாயம் கேட்டு திருமாவளவன் போராட்டம் நடத்தினால் நன்றாக இருக்கும்
வழக்கு சிபிஐ - யிடம் ஒப்படைக்க வேண்டும்
அந்த குற்றவாளி இது மட்டுமில்லாமல் பல குற்றங்கள் செய்து இருக்கிறார். அவர் திமுக நிர்வாகி என்று சொல்கிறார்கள் அது பற்றி விசாரிக்க வேண்டும். அந்த குற்றவாளி என்னென்ன பதவிகளில் இருந்துள்ளார் யாருடன் எல்லாம் புகைப்படம் எடுத்துள்ளார் என்று பாஜக மாநில தலைவர் ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். இதை திமுக வெளிப்படையாக எங்கள் கட்சியில் தான் இருந்தார் என்று ஒப்புக்கொள்ள வேண்டும். முழு பூசணிக்காயை மறைக்கும் கதையாக உள்ளது.
சட்டம் ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலம் தமிழ்நாடு
குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும் ஒப்புக் கொள்ள வேண்டும் அது திமுகவாக இருந்தால் என்ன வேறு யாராக இருந்தால் என்ன ? மற்ற வழக்குகள் போல இல்லாமல் சிறப்பான வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் இல்லை என்றால் சிபிஐ இடம் ஒப்படைக்க வேண்டும்
தமிழ்நாடு சட்ட ஒழுங்கு என்ற பேச்சு இல்லை உண்மையான சட்ட ஒழுங்கு இல்லை , பெரிய கேள்வி குறியாக உள்ளது. சட்டம் ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது