தமிழ்நாடு:
தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்த்றை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100% நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக மாறியது. வலுவடைந்து வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிஸா கடற்கரையை நாளை காலை நெருங்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாநில அரசுகளின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் அணைப் பாதுகாப்பு மசோதாவினை நிறைவேற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
பிரிட்டனில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது ஒமிக்ரான் நோய்த் தொற்று பாதிப்பா? என்பதை மரபணு வரிசை சோதனையில் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிட்கோ தொழிற்பேட்டைகளில் உள்ள சிறு குறு நிறுவனங்களுக்கு விரைந்து பட்டா வழங்க தலைமை செயலாளர் தலைமையில் உயர் மட்ட செயலாக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் தெரிவித்துள்ளார்.
இந்தியா:
கடந்த 24 மணி நேரத்தில் 9,216 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.8,612 பேர் குணமடைந்துள்ளனர்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி பிரதமரின் வாழ்த்துச் செய்தி தெரிவித்துள்ளார்.
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மத்திய அரசு எப்போது இழப்பீடு தரும் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
குற்றம்:
சென்னையில் 4 பெண்களிடம் காதலிப்பதாக கூறி வீடு மற்றும் பணத்தை பறித்ததாக தொழிலதிபர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ATM இயந்திரத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி மோசடி - கபடி போட்டி நடுவரை கப்சிப்பாக சென்று தூக்கிய போலீஸ்
சென்னை ஓட்டேரியில் மதுபோதையில் கத்தியை காட்டி ரகளை செய்த இருவர் கைது
உலகம்:
ஒமிக்ரான் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடுகள் தேவையற்றது என்றும் தடுப்பூசி செலுத்துதல் போதுமானது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பாலின மாற்றுக்கு எதிரான கன்வெர்ஷன் தெரபிக்கு கனடா அரச நிரந்தரத் தடை விதித்தது.
ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போர் கால வெடிகுண்டு வெடித்ததில், 4 பேர் படுகாயம் அடைந்தனர்
விளையாட்டு: இந்தியா – நியூசிலாந்து இடையேயான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன் குவித்தது.
உலக இளையோர் டேபிள் டென்னிஸ் போட்டியின் 15 வயதிற்குட்பட்டோருக்கான மகளிர் பிரிவில் இந்தியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்