ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போர் கால வெடிகுண்டு வெடித்ததில் குண்டு வெடித்த இடத்தில் இருந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.ஜெர்மனியின் ம்யூனிச் நகரில் இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.
1939ல் நடந்த இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியில் அமெரிக்க விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. அவற்றில் வெடிக்காத சில குண்டுகள் 76 ஆண்டுகாலம் கழித்தும் ஜெர்மனியில் ஆங்காங்கே அவ்வப்போது கிடைக்கப்பெற்று வருகிறது.
2017ம் ஆண்டு ஜெர்மனியில் ப்ராங்க்ஃபர்ட் நகரில் ப்ளாக்பஸ்டர் வகை வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. மூன்று வருடங்களுக்குப் பிறகு தற்போது மியூனிச் நகரில் தற்போது ஒரு ப்ளாக்பஸ்டர் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பவேரியா மாகாணத்தில் பாலத்துக்குக் கீழ் பணியாளர்கள் வேலை செய்துகொண்டிருந்த நிலையில் திடீரென அங்கே ஒரு குண்டு வெடித்தது. இதில் பணியாளர்கள் 4 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபப்ட்ட நிலையில் அங்கே விரைந்த குண்டை செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் வெடிகுண்டின் எச்சத்தை ஆய்வு செய்தனர்.
அதில் வெடிகுண்டு சுமார் 1.5கிலோ எடையுள்ளது என்றும் உலகப்போர் காலத்து ப்ளாக் பஸ்டர் ரக குண்டு என்றும் கண்டறியப்பட்டது. உலகப்போரின் தாக்கத்தில் இருந்து ஜெர்மனி இன்னும் மீளவில்லை என பொதுமக்கள் கருத்து கூறி வருகின்றனர்.