சென்னை ஓட்டேரி தாசமகான் பகுதியில் இரண்டு பேர் குடிபோதையில் கத்தி யை காட்டி மிரட்டி பொது மக்களை அச்சுறுத்துவதாகவும் மேலும் அப்பகுதியில் உள்ள நடைபாதை கடை வைத்திருப்பவர்களிடம் தகராறில் ஈடுபடுவதாகவும் ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற ஓட்டேரி போலீசார் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட இரண்டு பேரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
அவர்கள் ஓட்டேரி ஸ்டாரன்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த பாபு (49) மற்றும் ஓட்டேரி ஜானகிராமன் மூன்றாவது தெருவைச் சேர்ந்த அப்துல் முக்காரம் (43). என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் இருவரும் ஓட்டேரி தாசமகான் பகுதியில் உள்ள மதுபான கடைகளில் மது அருந்தி விட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி அச்சுறுத்தி உள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள நடைபாதை கடைகளில் சாப்பிட்டு விட்டு அவர்களிடம் பணம் தராமல் கத்தியை காட்டி மிரட்டி தகராறில் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தேங்கிய மழை நீரை அகற்ற கோரி சென்னையில் சாலை மறியல்
கடந்த சில வாரத்திற்கு முன்பு பெய்த மழையால் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் சென்னை கொளத்தூர் பகுதியான ராம் நகர், கே.சி கார்டன் பகுதியில் மழை நீர் தேங்கியது. தேங்கிய மழை நீர் செல்ல முடியாமல் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் இடுப்பளவு தேங்கியது. தேங்கிய மழை நீரில் கழிவு நீர் கலந்ததால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீச தொடங்கி தொற்று நோய்களும் பரவ ஆரம்பித்துள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும், கழிவு நீரை அப்புறப்படுத்ததால், திடீரென கொளத்தூர் சாலையில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறை அதிகாரிகள் கழிவு நீர் அப்புறப்படுத்த ஏற்பாடு செய்கிறோம் என்பதை உறுதியளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.