பிரிட்டனில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது ஒமிக்ரான் நோய்த் தொற்று பாதிப்பா?  என்பதை மரபணு வரிசை சோதனையில் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள்   தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி,   'அபாயத்தில் உள்ள நாடுகள்' என அடையாளம் காணப்பட்ட 13 நாடுகளிலிருந்து சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நான்கு விமான நிலையங்களுக்கு வருகைதரும் பயணிகளின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகிறது.  


இந்நிலையில், பிரிட்டனில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த, இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரில் ஒரு குழந்தை உட்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, பயணிகள் எட்டு பேரும்  தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ மேலாண்மை நெறிமுறையின்படி சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மாதிரிகள் முழு மரபணு வரிசைப்படுத்தலுக்கு (ஜீனோம் சீக்வென்சிங்க்) அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவிலேயே ஒமிக்ரானா இல்லையா என்பதை முடிவு செய்ய முடியும்.


இதற்கிடையே, சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணிக்கு  கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட அவர் தற்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  


முன்னெச்சரிக்கை நடவடிகைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், " தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரான் தொற்று கண்டறியப்படவில்லை. மாநிலத்தில் உள்ள சரவதேச விமான நிலையங்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளன. பிரிட்டன் மற்றும் சிங்கப்பூர் விமானங்களில் இருந்து வந்த சில பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த இரண்டு விமானங்களில் இவர்களுடன் பயணம் செய்த மற்ற பயணிகளின்  மாதிரிகளும்  மரபணு வரிசைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.   


முன்னதாக, கர்நாடாகவில் இருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தொற்றுப் பரவல் தடுப்பதற்கான பிரத்தியோக சிறப்பு நடவடிக்கைகளை அம்மாநில அறிவித்தது. ஒமிக்ரான் தொடர்பான தேவையற்ற வதந்திகளை பொது மக்கள் தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டது. 


Omicron FAQs: 3வது அலையா? தடுப்பூசி யூஸ் ஆகுமா? ஒமிக்ரான் குறித்து அரசு சொன்ன முழு விளக்கம்!


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண