மேலும் அறிய

Delimitation Bill Fails: தோல்வியில் முடிந்த தொகுதிமறுவரையறை- மகளிர் இடஒதுக்கீடு மசோதா.. ஷாக்கில் பாஜக

Delimitation Bill Fails: அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இல்லாததால், இந்த மசோதா முறைப்படி தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

மத்திய பாஜக அரசு தொகுதி மறுவரையறையை முன்னெடுக்கும் நோக்கில் கொண்டு வந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால்  தோல்வியடைந்தது.

அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இல்லாததால், இந்த மசோதா முறைப்படி தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

வாக்கெடுப்பு விவரம்: சொதப்பியது எங்கே?

இந்த மசோதாவிற்கு ஆதரவாக மொத்தம் 298 வாக்குகள் பதிவாகின. மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தரப்பில் 230  வாக்குகள் விழுந்தன.சாதாரண சட்டங்களுக்கு வெறும் பெரும்பான்மை போதுமானது என்றாலும், அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தைப் பொறுத்தவரை அவைக்கு வருகை தந்து வாக்களிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) ஆதரவு கட்டாயம். அந்த கணக்குப்படி பார்த்தால் வாக்கெடுப்பில் பங்கேற்ற 528 உறுப்பினர்களில், மசோதா வெற்றி பெற குறைந்தபட்சம் 352 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்டது. ஆனால், அரசுக்கு 298 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் மசோதா தோல்வியில் முடிந்தது.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், மொத்தம் 528 வாக்குகள் பதிவாகின, அதில் 298 ஆதரவாகவும், 230 எதிராகவும் பதிவாகின. முதல் சுற்றில் மொத்தம் 489 வாக்குகள் பதிவாகின, அதில் 278 ஆதரவாகவும், 211 எதிராகவும் பதிவாகின என்றார்.

ஓரணியில் நின்ற எதிர்க்கட்சிகள்

வாக்கெடுப்பின் போது ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஆளும் பாஜக கூட்டணி சார்பில் 298உறுப்பினர்கள் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.எதிர்க்கட்சியான 'இந்திய கூட்டணி ஓரணியில் திரண்டு 230 வாக்குகளை எதிராகப் பதிவு செய்தது.

131-வது சட்டத் திருத்த மசோதாவும் காலி!

தொகுதி மறுவரையை   தொடர்புடைய 131-வது அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவும் இன்று மக்களவையில் தோல்வியடைந்தது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் அதனுடன் தொடர்புடைய தொகுதி மறுவரை திருத்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் தொகுதி மறுவரை ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் எனக் கருதப்பட்ட நிலையில், இந்த மசோதாக்கள் தோல்வியடைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் இன்று பரபரப்பு முதல் டெல்லி அரசியல் வரை.. ஆகஸ்ட் 21-ம் தேதி TOP 10 முக்கிய செய்திகள்!
தமிழகத்தில் இன்று பரபரப்பு முதல் டெல்லி அரசியல் வரை! ஆகஸ்ட் 21-ம் தேதி TOP 10 முக்கிய செய்திகள்!
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Trump Vs Iran: உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.4,040 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.4,040 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
7 Seater: அடடே 20+KM மைலேஜில் 7 சீட்டர் - ஜப்பான் மாடலின் விலை, அம்சங்கள், வசதிகள் - முழு விவரம் இதோ
அடடே 20+KM மைலேஜில் 7 சீட்டர் - ஜப்பான் மாடலின் விலை, அம்சங்கள், வசதிகள் - முழு விவரம் இதோ
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
Embed widget