Coronavirus LIVE Updates: சென்னையில் அதிக பரிசோதனை காரணமாக தொற்று எண்ணிக்கை உயர்கிறது - அமைச்சர்
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
நோய்த் தடுப்புக்கான தேசிய மைய இயக்குநர் தலைமையில் 6 பேர் கொண்டக் குழுவை மத்திய அரசு கேரளாவிற்கு அனுப்புகிறது. கேரளாவில் இன்னும் கொரோனாத் தொற்று அதிகமாக உள்ளது, கொவிட்-19-ஐ கட்டுப்படுத்த அம்மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இக்குழு உதவும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
நாமக்கல் மாவட்டத்தில் கோவாச்சின் தடுப்பூசி இன்று இரண்டாவது தவணை செலுத்தும் இடங்கள்:
சென்னையில் கொரோனா பரிசோதனைகள் கூடுதலாக மேற்கொள்ளப்படுவதால் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை சற்று அதிகமாக உள்ளது என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்களில் இருந்து இங்கிலாந்திற்கு வரும் போது தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 88,376 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐந்து மாதங்களுக்குப் பிறகு ஏற்பட்ட அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு இதுவாகும்.
2021 ஏப்ரல் 4ம் தேதி முதல், முக கவசம் அணியாத 1 லட்சத்துக்கும் (1883565) மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அகில இந்திய அளவில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் விவரம்
இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 46.26 கோடியாக அதிகரித்துள்ளது.
இன்று கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடப்படமாட்டாது. நாளை(30-07-2021) தடுப்பூசிகள் போடும் இடங்களைப் பற்றிய விபரங்கள் காலை 8.00 மணிக்கு இணையதளம் (https://coimbatore.nic.in) மற்றும் twitter, facebook போன்ற சமூக ஊடகங்களின் வாயிலாக மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்படும்.
கடந்த நான்கு வாரங்களாக, நாடு முழுவதும் 22 மாவட்டங்களில் கொரோனா நோய்த் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது - மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்.
கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் 43,509 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,03,840ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 38,465 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.38 சதவீதமாகும்.
Background
தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்புமருந்து வழங்கும் சேவையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று சென்னையில் தொடங்கி வைத்தார். தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் இந்த சேவை வழங்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -