Breaking LIVE : திருப்பூரில் 9 செ.மீ. மழை பதிவு
நாடு முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகளை ஏபிபி நாடு இணையதளத்தில் உடனுக்குடன் காணலாம்.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்
திருப்பூர், தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க கோரி தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூரில் ஆட்சியர் முகாம் அலுவலக பகுதியில் 9 செ.மீ. மழை பதிவு
சூளூர், பண்ருட்டி, ராசிபுரத்தில் தலா 7 செ.மீ அவிநாசி, பரமத்திவேலூரில் தலா 6 செ.மீ பெருந்துறையில் தலா 5 செ.மீ
செய்யூர், பேச்சிப்பாறை, திருப்பூர், கடலூர், மேட்டுப்பாளையம், புழல், கோபி மாதவரத்தில் தலா 5 செ. மீ மழை பதிவு
கேரள கடற்கரையில் இருந்து இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கான விடியல் பிறந்துள்ளது - மோடி
இந்தியா எதிர்கொள்ளும் சவால்களின் பதிலாக ஐ என் எஸ் விக்ராந்த் கப்பல் கடலில் உருவெடுத்துள்ளது -பிரதமர் மோடி
இந்தியர்களின் திறமை, மன உறுதிக்கு அடையாளமாக கம்பீரமாக எழுந்து நிற்கிறது ஐ என் எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் - பிரதமர் மோடி
இந்தியாவின் திறமை, மன உறுதிக்கு அடையாளம் விக்ராந்த். ஐஎன் எஸ் விக்ராந்த் கப்பல், இந்தியர்கள் ஒவ்வொருவரின் பெருமை, இது கனவு நனவாகும் தருணம் - பிரதமர் நரேந்திர மோடி
262 மீட்டர் நீளம், 62 மீட்டர் அகலம் கொண்ட விக்ராந்த் போர்க்கப்பல், ஏறத்தாழ 43,000 டன் எடையை தாங்கக் கூடியது.
2,200 அறைகளை கொண்ட விக்ராந்த் கப்பலில் 1,600 அறைகள் கப்பலில் பணியாற்றுபவர்களுக்காக வடிவமைப்பு.
விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்பட 31 போர் விமானங்களை விக்ராந்த் போர்க்கப்பலில் இருந்து இயக்க முடியும்.
இந்தியாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல்களை விட 7 மடங்கு பெரியது ஐஎன்எஸ் விக்ராந்த்.
ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் மணிக்கு 51 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.
மத்திய அரசாங்க பொதுத்துறை நிறுவனமான கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தால் ஐ.என்.எஸ் விக்ராந்த் போர் கப்பல் கட்டமைப்பு
9 அரசுப் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பில் தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை மூட உத்தரவு.
ஏற்கனவே சேர்க்கப்பட்ட மாணவர் சேர்கையை ரத்து செய்யவும் மாணவர்களை வேறு வகுப்பிற்கு மாற்றவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு
9 அரசுப் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பில் தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை மூட உத்தரவு.
ஏற்கனவே சேர்க்கப்பட்ட மாணவர் சேர்கையை ரத்து செய்யவும் மாணவர்களை வேறு வகுப்பிற்கு மாற்றவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு
ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா மட்டும் தற்போது சேவையில் உள்ளது.போர்க்கப்பலை நாட்டு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி.
இந்தியாவில் மேலும் 9,685 கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர் இதுவரை 4,38,55,365 பேர் குணமடைந்தனர்
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 21 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இந்த விமானம் தாங்கி போர் கப்பலை பிரதமர் மோடி கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கேரளாவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.
பொது மக்களின் கொந்தளிப்பை தொடர்ந்து, கர்நாடகாவின் அரசியல் ரீதியாக சக்திவாய்ந்த லிங்காயத் சமூகத்தின் மதத் தலைவரான சிவமூர்த்தி சரணரு நேற்று கைது செய்யப்பட்டார். பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டு மைனர் பெண்கள் அவர் மீது குற்றம் சாட்டி இருந்தனர்.
இந்திய கடற்படைக்கான புதிய கொடியை பிரதமர் மோடி இன்று அறிமுகம் செய்து வைக்கிறார்.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Background
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு நேற்று நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், ஆரியமா சுந்தரம் மற்றும் விஜய் நாராயண் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் ஆஜராகி வாதிட்டனர். அப்போது, தனி நீதிபதியின் தீர்ப்பில் பல்வேறு தவறுகள் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவுக்கு ஜூலை 1 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் தகுந்த அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்டவில்லை என்ற தனி நீதிபதி கூறியுள்ளது தவறு என்றும் தெரிவித்தனர்.
அதிமுகவினர் ஒற்றை தலைமை வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததற்கு எந்த புள்ளி விவரங்களும் இல்லை எனவும், கட்சி உறுப்பினர்களின் எண்ணத்தை 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது யூகத்தின் அடிப்படையிலானது என்றும் வாதம் முன்வைத்தனர்.
ஜூன் 23 ம் தேதிக்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டும் என மூத்த தலைவர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்படாத நிலையில், அந்த நிவாரணத்தை தனி நீதிபதி வழங்கியது அசாதாரணமானது என்றும் எடப்பாடி பழனிச்சாமியின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
கட்சி விவகாரங்களை பொறுத்தவரை பொதுக்குழு முடிவே இறுதியானது. அடிப்படை தொண்டர்களின் கருத்துக்களை பெறவில்லை என்ற தனி நீதிபதி தீர்ப்பளித்தது தவறு எனவும் சுட்டிக்காட்டினர்.
பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆஜராகி, அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்தல் நடத்துவது என செயற்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய பின் பொதுக்குழு ஒப்புதல் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.
பின்னர், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் கடந்த 25ம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -