சர்வதேச விமான நிலையம்
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக ஆக்க வேண்டும் என 20 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை இருந்து வரும் வேலையிலே முதலில் 24 மணி நேரம் செயல்படும் விமான நிலையமாக மாற்றினால் தான் சர்வதேச அந்தஸ்து கொடுக்க முடியும் என முட்டுக்கட்டை போட்டிருந்தது. 24 மணி நேர விமான சேவை இல்லாததால் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பகுதியில் இருந்து வெளிநாட்டிற்கு செல்லும் பயணிகள் திருவனந்தபுரம், சென்னை ஆகிய விமான நிலையங்களை பயன்படுத்தும் சூழல் இருந்து வந்தது.
பயனுள்ள மதுரை விமான நிலையம்
அதன் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள் தென் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் அடிக்கடி இதற்காக குரல் எழுப்பி வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் என விமான நிலைய அதிகாரி தகவல் தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்திற்குள் 24 மணி நேரம் சேவை தொடக்க நிகழ்ச்சியும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து மதுரை விமான நிலையம் தென் மாவட்ட மக்களுக்கு பயனுள்ள போக்குவரத்து மையமாக மாறுவருகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வேண்டிய விமானம் மோசமான வானிலை காரணமாக மதுரையில் தரையிறக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது
இண்டிகோ விமானம் சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு 7:35 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். இந்த நிலையில் வழக்கம் போல் காலை 6:26 மணியளவில் 77 பயணிகளுடன் சென்னையிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் தூத்துக்குடி விமான நிலையம் அருகே மோசமான வானிலை மற்றும் அதிக மேகமூட்டம் காரணமாக மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
77 பயணிகள் பத்திரமாக இங்கிருந்து கார் மூலம் புறப்பட்டனர்
இந்த விமானத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு பயணம் செய்த நிலையில் அவர் உட்பட 77 பயணிகளும் பத்திரமாக மதுரை விமான நிலையத்திலிருந்து கார் மூலம் புறப்பட்டனர். அமைச்சர் உட்பட 77 பயணிகளுடன் தூத்துக்குடி செல்ல வேண்டிய விமானம் மோசமான வானிலை காரணமாக திடீரென மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து விமானத்தில் அமைச்சர் ஏ.வ.வேலு உட்பட 77 பயணிகள் பத்திரமாக இங்கிருந்து கார் மூலம் புறப்பட்டனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Adani: அச்சச்சோ..! கைதாகிறாரா மோடியின் நண்பர் கவுதம் அதானி - ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாக பிடிவாரண்ட்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - TN Rain: ரைட்டு..! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - சென்னை வானிலை மையம் அறிக்கை