Breaking LIVE: அக்டோபர் 10ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- இபிஎஸ் ஆலோசனை

Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 06 Oct 2022 07:18 PM
அக்டோபர் 10ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- இபிஎஸ் ஆலோசனை

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அக்டோபர் 10ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியகியுள்ளது. இக்கூட்டமானது அதிமுக தலைமை அலுவலகம் எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Breaking LIVE : இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2022 ஆம் ஆண்டு இலக்கத்தியத்திற்கான நோபல் பரிசு பிரான்சின் ஆனி எர்னாக்ஸ்-க்கு அறிவிப்பு 

Breaking LIVE : அங்கன்வாடியில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க ஆணை

அங்கன்வாடி - எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புக்கு ரூ.5,000 தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க ஆணை

Breaking LIVE : ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


சென்னை வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி மாற்றப்பட்டு, சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக நியமனம். ஆயுதப்படை பிரிவு ஐஜி கண்ணன் வடக்கு மண்டல ஐஜியாக நியமனம். சென்னை தாமஸ் மவுண்ட் துணை ஆணையராக தீபக் சிவஜ் நியமனம்   செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.யாக ஏ.பிரதீப் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

Breaking LIVE : மியான்மர் வேலைவாய்ப்பு மோசடி - 2 பேர் கைது 

மியான்மர் நாட்டில் இந்தியர்களிடம் நடைபெற்ற வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக 2 இடைத்தரகர்கள் கைது

Breaking LIVE : கொடநாடு வழக்கு - ஷகீல் அக்தர் விசாரிப்பார்

கொடநாடு வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணை அதிகாரியாக  ஷகீல் நியமனம்

Breaking LIVE : PFIக்கு தடை - விசாரணை அதிகாரி தினேஷ்குமார் ஷர்மா

பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடை குறித்த வழக்குகளை விசாரிக்க தீர்ப்பாய அதிகாரி நியமனம்


உபா தீர்ப்பாய விசாரணை அதிகாரியாக டெல்லிஉயர்நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமார் ஷர்மாவை மத்திய அரசு நியமித்துள்ளது

Breaking LIVE : சென்செக்ஸ் 418 புள்ளிகள் உயர்வு

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 418 புள்ளிகள் உயர்ந்து 58,483 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.


தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 128 புள்ளிகள் உயர்ந்து 17,402 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Breaking LIVE : இந்தியா - மேலும் 2,529 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,529 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது - மத்திய சுகாதாரத்துறை 

Breaking LIVE : இன்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் வெள்ளி கிராமுக்கு  ரூ.66.50 ஆக விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.66,500 ஆக விற்பனையாகிறது.

Breaking LIVE : இன்றைய தங்க விலை நிலவரம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து ரூ.38,720 ஆக விற்பனையாகிறது.  22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.4,840 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 41,936 ரூபாயாகவும், ஒரு கிராம் 5, 242 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Breaking LIVE: துர்கை சிலையை கரைக்க சென்ற மக்கள்... 8 பேர் பலி..

மேற்கு வங்கத்திலுள்ள மால்பசார் ஆற்றில் துர்கை சிலையை கரைக்க மக்கள் சென்ற போது திடீர் வெள்ள பேருக்கு ஏற்பட்டுள்ளது. அதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

Breaking LIVE: சைபர் க்ரைம் கும்பலுக்கு எதிராக 115 இடங்களில் சோதனை

சைபர் க்ரைம் கும்பலுக்கு எதிராக பன்னாட்டு புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து சிபிஐ அதிரடி: நாடுமுழுவதும் 115 இடங்களில் சோதனை.

Breaking LIVE : ராகுல் நடைப்பயணம் - சோனியா காந்தி பங்கேற்பு 

கர்நாடகா - மாண்டியாவில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் சோனியா காந்தி பங்கேற்பு 

Breaking LIVE : மெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு-மேயர் உட்பட 18  பேர் பலி 

மெக்சிகோவின் சான் மிகுவெல் டோடோலாபன் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அப்பகுதி மேயர் உட்பட 18 பேர் உயிரிழப்பு 

Breaking LIVE : அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு 

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலையில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு 


சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரியில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் 

Breaking LIVE: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி... 14 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை..

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு; 14 மாவட்டங்களில் மழை நீடிக்கும் - சென்னை வானிலை மையம் தகவல்

Breaking LIVE: கலைஞர் நினைவாக பேனா சின்னம் அமைக்க சுற்றுசூழல் பாதிப்பு அறிக்கை- மத்திய அரசு அனுமதி

கலைஞர் நினைவாக பேனா சின்னம் அமைக்க சுற்றுசூழல் பாதிப்பு அறிக்கை தயாரிக்கலாம்: தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு அனுமதி

Breaking LIVE: திமுக ஆன்மிகத்திற்கு எதிரானதல்ல- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மதத்தை வைத்து சில பிழைப்பு நடத்துகின்றனர்; ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல திமுக - வள்ளலார் முப்பெரும் விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பேச்சு

Background

சென்னையில் 138ஆவது நாளாக பெட்ரோல், டீசல்  மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு  நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6உம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.  இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 137ஆவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (அக்டோபர் 6) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.


தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் விலை உயர்த்தப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம், தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.


பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 12 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.