இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை மனைவி சாய்ரா பானு விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவரது வழக்கறிஞர் அதிகாரப்பூர்வ அறிக்கையைப் பகிர்ந்துள்ளார்.


ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவி சாய்ராவும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் மூன்று தசாப்த கால திருமண வாழ்க்கையை நிறைவு செய்திருப்பார்கள். ஆனால் தற்போது ஏறக்குறைய 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. 



ரஹ்மானும் சாய்ராவும் 1995ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். ரஹ்மானுக்கும் அவரது மனைவிக்கும் கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். 


இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா தம்பதி விவாகரத்து செய்ய உள்ளனர். இதுகுறித்து சாய்ராவின் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு, திருமதி சாய்ரா தனது கணவர் திரு. ஏ.ஆர். ரஹ்மானிடமிருந்து பிரிந்து செல்வது என்ற கடினமான முடிவை எடுத்துள்ளார். இந்த முடிவு அவர்களின் உறவில் ஏற்பட்ட கணிசமான மன உளைச்சலுக்குப் பிறகு எடுக்கப்பட்டது. ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு இருந்தபோதிலும், பிரிவது என தம்பதியினர் முடிவு செய்துள்ளனர். பதட்டங்கள் மற்றும் சிரமங்கள் அவர்களுக்கிடையில் தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன. வலி மற்றும் வேதனையால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக திருமதி சாய்ரா வலியுறுத்தினார். இந்த சவாலான நேரத்தில் பொதுமக்களிடம் தனியுரிமை மற்றும் புரிதலை அவர் கோருகிறார், ஏனெனில் அவர் தனது வாழ்க்கையில் இந்த கடினமான அத்தியாயத்தை வழிநடத்துகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ALSO READ | AR Rahman: ஹனிமூன் போன இடத்தில் செய்யும் வேலையா... இசைப்புயல் ரஹ்மான் பற்றிய ரகசியத்தை உடைத்த மைத்துனன்