Breaking LIVE : அதிமுகவில் இருந்து விலகும் கோவை செல்வராஜ்

Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 03 Dec 2022 08:10 PM
ஆபரேஷன் மறுவாழ்வு திட்டம்-726 பிச்சைக்காரர்கள் மீட்பு

தமிழ்நாட்டில் ஆபரேஷன் மறுவாழ்வு திட்டம் மூலம் 726 பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

அதிமுகவில் இருந்து விலகும் கோவை செல்வராஜ்

அதிமுகவில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் அறிவித்துள்ளார்.

விமர்சையாக நடந்து வரும் தீபத் திருவிழா

திருவண்ணாமலையில், கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம் நாளையொட்டி பக்தர்களின் திரளான கூட்டம் காணப்படுகிறது

தலைமை செயலாளருக்கு தேசிய மனித உரிமை ஆணையம்  நோட்டீஸ்

பொன்னியம்மன் மேட்டில் 12 சிறார்கள் மீட்பு தொடர்பாக தமிழக தலைமைச்செயலருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.
4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகர காவல் ஆணையர், பீகார் தலைமை செயலருக்கும் நோட்டீஸ்.

இனிமேல் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மாதம் 1,500 - முதல்வர் அறிவிப்பு

இனிமேல் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை 1,000த்தில் இருந்து 1,500 ஆக வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை அன்புப் பாதை - முதல்வர்

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு முதல்வர் பேசுகையில், மெரினாவில் மாற்றுத் திறனாளிகாளுக்கென அமைக்கப்பட்ட பிரத்யேகப்பாதை என்பது அன்புப்பாதை என குறிப்பிட்டுள்ளார். 

சத்தீஸ்கரில் இனி 76% இடஒதுக்கீடு..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 76% இட ஒதுக்கீட்டினை பின்பற்ற சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இன்றைய தங்க விலை நிலவரம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 32 குறைந்து ரூ. 40,128  ஆக விற்பனையாகிறது.  22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4 குறைந்து  ரூ.5,016 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

ஒரு கிலோ மல்லிகை பூ - கிலோ 5,000

தேனி மாவட்டத்தில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூபாய் 5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Background

தமிழகத்தில் இன்று முதல் கன மழை தொடர வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.  இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8-ம் தேதியை ஒட்டி வடதமிழகம்- புதுவை,   மற்றும் அதனை ஒட்டிய  தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும்.


கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு  காரணமாக,


03.12.2022:  தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல்  கன மழை பெய்யக்கூடும். 


04.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.


05.12.2022: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 


06.12.2022:  தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும்  லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 


டிசம்பர் 3, 2022 அன்று தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது /  மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது /  மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):


வேதாரண்யம் (நாகப்பட்டினம்), புதுக்கோட்டை, அண்ணாமலை நகர் (கடலூர்) தலா 3, பேராவூரணி (தஞ்சாவூர்), சத்தியார் (மதுரை) தலா 2, செம்மேடு (விழுப்புரம்), சிதம்பரம் AWS (கடலூர்), மதுரை தெற்கு, தல்லாகுளம் (மதுரை), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), கோடியக்கரை (நாகப்பட்டினம்), திருப்புவனம் (சிவகங்கை), செஞ்சி (விழுப்புரம்), பஞ்சப்பட்டி (கரூர்), லால்பேட்டை (கடலூர்), மாயனூர் (கரூர்), கீரனூர் (புதுக்கோட்டை), ஆயின்குடி (புதுக்கோட்டை), தீர்த்தாண்டானம் (ராமநாதபுரம்), கிருஷ்ணராயபுரம் (கரூர்), சிவகங்கை, சித்தம்பட்டி (மதுரை), அரவக்குறிச்சி (கரூர்), வட்டானம் (ராமநாதபுரம்), அம்மூர் (இராணிப்பேட்டை)  தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை: 


04.12.2022: அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


05.12.2022: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


06.12.2022: தெற்கு வங்கக்கடலின்  மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.