Breaking LIVE : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சவால்

Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 30 Nov 2022 12:34 PM
தன்னைதானே அவமானப்படுத்திக்கொள்கிறாரா ஆளுநர் ? - திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன்

ஆளுநர் பிறப்பித்த சூதாட்ட  அவசர தடை சட்டத்திற்கு ஒப்புதல் தர அவரே மறுக்கிறார் என்றால் ஆளுநர் தன்னைதானே அவமானப்படுத்திக்கொள்கிறாரா ? என்று கேட்க வேண்டியிருக்கிறது- திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன்

கஞ்சா விற்பனையில் ஒரு சிலர் மட்டுமே கைது, மற்றவர்களை ஏன் கைது செய்யவில்லை - எடப்பாடி பழனிசாமி கேள்வி

"பள்ளி, கல்லூரிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிலரை மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை ஏன் கைது செய்யவில்லை. இது குறித்த கேள்விக்கு முதலமைச்சர் இடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை" என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சவால்

அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து விவாதிக்க எங்கு அழைத்தாலும் நான் வரத் தயார் ; திமுக ஆட்சியின் திட்டங்கள் குறித்து பேச நீங்கள் தயரா..? என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்


 

கோகுல்ராஜ் கொலை வழக்கு இரண்டு வாரத்திற்கு ஒத்திவைப்பு

சுவாதி பொய்யான சாட்சியம் அளித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்க உத்தரவிட்டு, உண்மையை கூற சுவாதிக்கு  இரண்டு வார கால அவகாசத்தையும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கொடுத்துள்ளது

படுபாதாளத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு - எடப்பாடி பழனிசாமி

நாட்டு மக்களை பற்றி சிந்திக்காமல்; விட்டு மக்களை பற்றியே முதலமைச்சர் சிந்திக்கிறார் - எடப்பாடி பழனிசாமி

மக்கள் வயிறெரிகிறார்கள் - எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக இருப்பதை கண்டு சிலருக்கு வயிறெரிகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். ஆனால், சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று மக்கள் வயிறெரிகிறார்கள் - எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர்


 

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் போராட்டம் 

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் செய்து வரும் விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் கடன் தர மறுப்பதாக அவர்களின் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்

ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் வாபஸ்..!

பழவேற்காடு மீனவர்களின் ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம், சார்-ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையால் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

மேட்டூர் அணை - 12,226 கன அடி நீர்வரத்து 

சேலம் - மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,234 கன அடியில் இருந்து 12,226 கன அடியாக அதிகரித்துள்ளது

இன்றைய தங்க விலை நிலவரம்

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.4,936க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.39,488க்கு விற்பனையாகிறது

பயணிகள் இல்லாத திருப்பதி ரயிலில் தீ விபத்து..!

பயணிகள் இன்றி திருப்பதி ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. அடையாளம் தெரியாத நபர் சிகரெட் பிடித்துவிட்டு அணைக்காமல் வீசி சென்றதால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி அலட்சியத்தால் ஒரு உயிர் பறிபோனது - வைகோ

ஆளுநர் ஆர்.என்.ரவி அலட்சியத்தால் ஒரு உயிர் பறிபோனது என மதிமுக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். 

சினாவில் அதிகரிக்கும் கொரோனா..!

சீனாவில் நேற்று மட்டும் 38 ஆயிரத்து 645 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி உயிரிழப்பு..

மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி நடைபயிற்சிக்கு செல்லுகையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

Background

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 190 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.
 
பெட்ரோல், டீசல் விலை:


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 193வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (நவம்பர்.30) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.


இனி எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையா..?


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


 இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


2025 இலக்கு:


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டிற்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.