Breaking News LIVE: மல்யுத்த சம்மேளன தலைவர் மீது பாலியல் வழக்கு : விசாரணைக் குழுவில் இணைந்தார் பபிதா போகாட்..

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 31 Jan 2023 08:52 PM
மல்யுத்த சம்மேளன தலைவர் மீது பாலியல் வழக்கு : விசாரணைக் குழுவில் இணைந்தார் பபிதா போகாட்

உலக பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நாடாக இந்தியா மாறி இருக்கிறது - குடியரசுத் தலைவர் உரை..

 உலக பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நாடாக இந்தியா மாறி இருக்கிறது - குடியரசுத் தலைவர் உரை..

வீடூர் அணையில் இருந்து நீர்திறக்க, நீர்வளத்துறை ஆணை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், வீடூர் அணையிலிருந்து, திண்டிவனம் மற்றும் வானூர் வட்ட பகுதிகளுக்கு  2022 -2023 – ஆம் ஆண்டு பாசனத்திற்கு 01.02.2023 முதல் 15.06.2023 வரை 135 நாட்களுக்கு மொத்தம் 328.56 மில்லியன் கன அடி தண்ணீர்  திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.  இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 2200 ஏக்கர் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 1000 ஏக்கர் ஆக மொத்தம் 3200 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும் என நீர்வளத்துறை அறிக்கை தெரிவிக்கிறது

Erode By Election : ஈரோடு இடைத்தேர்தல்: 2 நாளில் முடிவு எடுக்கப்படும், இதுவரை முடிவு எட்டப்படவில்லை - பாஜக

Erode By Election : ஈரோடு இடைத்தேர்தல்: 2 நாளில் முடிவு எடுக்கப்படும், இதுவரை முடிவு எட்டப்படவில்லை - பாஜக 

கோயில்கள் பெயரிலான போலி இணையதளங்களை முடக்க ஆணை..!

கோயில்கள் பெயரிலான போலி இணையதளங்களை முடக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. போலி இணையதளங்களை இயக்குவோர் மீது உரிமையியல் குற்றவியல் வழக்கு தொடரவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்- வானிலை மையம்

கன்னியாகுமரி , நெல்லை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாடு என்ன..? நிர்வாகிகள் ஆலோசனை..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாடு குறித்து கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என்று அண்ணாமலையிடம் நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Breaking News LIVE: ஈரோடு இடைத்தேர்தல் - இதுவரை ரூ.8.43 லட்சம் பணம் பறிமுதல்

பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் இதுவரை ரூ.8,43,900 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இடைத்தேர்தலுக்கான பொதுப்பார்வையாளர்களாக இருவரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு

இடைத்தேர்தலுக்கான பொதுப்பார்வையாளர்களாக இருவரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்.15 வரை அவகாசம்

மின் இணைப்பு  எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 15-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். 

வெள்ளத்தின்போது சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி ஊழியர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு!

வெள்ளத்தின்போது சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி ஊழியர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். 

இரு அவைகள் கூட்டு கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் தன்கர் உரை..!

இரு அவைகள் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் முர்முவை தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் தன்கர் உரையாற்றி வருகிறார். 

துல்லிய தாக்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாத நடவடிக்கைக்கு பதிலடி - திரௌபதி முர்மு

ஊழலை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. கரீப் கல்யாண் யோஜனா திட்டம் மூலம் கோடிக்கணக்காக ஏழை மக்கள் தடையற்ற உணவை பெறுகின்றனர். சட்டப்பிரிவு 370 நீக்கம், முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட விஷயங்களில் அரசு தீர்க்கமாக முடிவு எடுக்கிறது. துல்லிய தாக்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாத நடவடிக்கைக்கு பதிலடி - திரௌபதி முர்மு

நாடு முழுவதும் 11 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் - திரௌபதி முர்மு

நாடு முழுவதும் 11 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வசதி. நவீன கட்டமைப்பை நோக்கி இந்தியா நகர தொடங்கியுள்ளது - திரௌபதி முர்மு

ஜம்மு காஷ்மீர்கான சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரத்தில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டது - திரௌபதி முர்மு

50 கோடி ஏழை மக்கள் மத்திய அரசின் இலவச சுகாதார காப்பீட்டை பெற்றுள்ளனர். முத்தலாக் முறை ரத்து விவகாரத்தில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டது. ஜம்மு காஷ்மீர்கான சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரத்தில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டது.

9 ஆண்டுகளில் இந்தியாவின் மீதான உலக நாடுகளின் பார்வை மாறியுள்ளது - திரௌபதி முர்மு

ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவின் மீதான உலக நாடுகளின் பார்வை மாறியுள்ளது. புதிய இந்தியாவை கட்டமைக்க அடுத்து வரும் 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது - திரௌபதி முர்மு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்... வேட்புமனு தாக்கல் தொடங்கியது..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 

உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்தும் வெளியேற்றப்பட்டார் அதானி

உலக பணக்காரர்கள் வரிசையில் முதல் மூன்று இடங்களில் இருந்து வந்த அதானியின் பங்குகள் தொடர் சரிவு சந்தித்து வரும் நிலையில் பணக்காரர் பட்டியலிலும் சரிவை சந்தித்து வருகிறார்

சுய சார்பு இந்தியாவை உருவாக்குவது அவசியம் - திரவுபதி முர்மு

பிறநாடுகளை இந்தியா சார்ந்திருந்த காலம் தற்போது மாறிவிட்டது. சுய சார்பு இந்தியாவை உருவாக்க வேண்டியது அவசியம். உலக அளவில் சக்தி வாய்ந்த பொருளாதார நாடுகளில் இந்தியா 5வது இடம் பெற்றுள்ளது. அனைத்து தரப்பினருக்கும் நிலையான சீரான வளர்ச்சியே அரசின் இலக்கு. உலக நாடுகளின் பிரச்சினைக்கு தீர்வு சொல்லும் அளவி இந்தியா உள்ளது. இந்தியாவில் இருந்து வருமையை ஒழிப்பது அவசியம். 

இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் முர்மு உரை..!

நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றி வருகிறார்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரை கடக்கும்...!

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை இலங்கையில் கரையை கடக்கிறது.  

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெங்கு மழை..?

அடுத்த 3 மணிநேரத்தில் தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. 

அனைத்து தரப்பு மக்களுக்கு ஏற்ற வகையில் பட்ஜெட் இருக்கும் - பிரதமர் மோடி

அனைத்து தரப்பு மக்களுக்கு ஏற்ற வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் நாளையும், நாளை மறுநாளும் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு இலங்கையை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் நாளையும், நாளை மறுநாளும் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் தொடங்கியது ஜி20 கல்வி கருத்தரங்கு

சென்னை தரமணியில் ஜி20 கல்வி கருத்தரங்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரையை கடக்கிறது

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை இலங்கை அருகே கரையை கடக்க உள்ளது. 

Background

தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்க இன்றே கடைசி நாள். இதுவரை 2.34 கோடி மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. இன்னும் 33 லட்சம் பேர் இணைக்காமல் உள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.


தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலையிலான மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின் நுகர்வோர் 2.67 கோடி பேர் உள்ளனர். இலவசம், மானியம் பெறும் பயனாளிகளின் விவரங்களை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


இதையடுத்து, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது.  இதற்கான கடைசி நாளாக கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி என அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலானோர், தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்காததால், இதற்கான கால அவகாசத்தை ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டித்து மின் வாரியம் உத்தரவிட்டது.


2023 ஜனவரி 31 ம் தேதிக்கு பிறகு மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க அவகாசம் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 30 வரை சுமார் 1.61 கோடி பேருக்கு மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார்.









தற்போது 2,811 பிரிவு அலுவலங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும், கூடுதலாக 2,811 சிறப்பு முகாம்கள் மூலம் அந்தந்த பகுதிக்கே நேரடியாக சென்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார். 


மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காத நுகர்வோர், மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால், மின் பயன்பாடு கணக்கெடுத்த 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்த முடியாததுடன், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். மின் இணைப்பு துண்டிக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.