சிவகங்கை அருகே படப்பிடிப்பில் பங்கேற்கவந்த பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்


கங்கை அமரன்: 


தமிழ் சினிமாவில் கிராமத்து கதைகள் இயக்கியதன் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் இயக்குனர் மற்றும் இசையமைபாளரான கங்கை அமரன், இவர் இசையமைப்பாளரின் சகோதரர் ஆவார். இவர் 1982 ஆம் கோலி கூவுது என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகி அறிமுகமாகி, கரகாட்டாகாரன் உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ஆவார்.இவரது மகன் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவராக இருந்து வருகிறார்.


இதையும் படிங்க: Vishal: குஷ்பூவை இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்த விஷால்! நடுக்கும் ஜுரத்தில் இப்படியா?


திடீர் உடல்நலக்குறைவு: 


இந்த  நிலையில் 77 வயதான கங்கை அமரன் பிரபல தயாரிப்பு நிறுவனம் எடுத்துவரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்சமயம் சிவகங்கை மற்றும் மானாமதுரை ஆகிய பகுதிகளை சுற்றி நடைபெற்றுவரும் நிலையில் அதில் பங்கேற்க அவர் மானாமதுரை வந்துள்ளார். அச்சமயம்அவருக்கு  திடிரென  உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து முதலுதவி சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்ததை தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு காரில் அழைத்து செல்லப்பட்டார்.


இதையும் படிங்க: Vishal: "எப்படி இருந்த மனுஷன்.. இப்படி ஆகிட்டாரே? "விஷாலைப் பார்த்து பரிதாபப்படும் ரசிகர்கள்


டிஸ்சார்ஜ்:


அதன்பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு டிஸ்சார்டு செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. கங்கை அமரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏறப்பட்டதை கேட்டு தமிழ் திரையுலகம் மற்றும் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். 


கங்கை அமரன் வாழ்வே மாயம், மெளன கீதங்கள் போன்ற பல படங்களுக்கு கங்கை அமரன் இசையமைத்துள்ளார், அவர் 1997 ஆம் ஆண்டு வெளியான தெம்மாங்கு பாட்டுக்காரன் என்கிற திரைப்படத்தை கடைசியாக இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது