Breaking News LIVE: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தலாம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
BREAKING NEWS: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தலாம், ஆனால் முடிவை அறிவிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுக்குழு தீர்மான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தவேண்டிய அவசியம் என்ன என உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு கேள்வி எழுப்பியுள்ளார்
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு - செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஜிகிஸ்தானில் இன்று காலை 11.30 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய புவியதிர்வு முகமை தகவல் - ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக நிலநடுக்கம் பதிவு
கட்சிக்கு விதிராக நீதிமன்றங்கள் சென்றால் பதவி பறிக்கப்படும் என விதிகள் உள்ளன என உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு வாதம் வைத்தது.
அடிப்படை உறுப்பினர்களால் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கூறும் ஓபிஎஸ், தேர்தலை தடுக்க நினைப்பது ஏன் என உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு வாதம் தெரிவித்துள்ளது
ஓபிஎஸ் தரப்பினர் கற்பனை உலகில் உள்ளனர் என உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
அதிமுகவின் எதிர்காலத்தை கருதியே பொதுச்செயலாளர் தேர்தல் என இபிஎஸ் தரப்பு வாதம் வைத்துள்ளது
பொதுச்செயலாளர் தேர்தலில் நீதிமன்றம் தலையிட கூடாது என இபிஎஸ் தரப்பு வாதம்
அதிமுகவின் அஸ்திவாரத்தை உலுக்கும் வகையில் ஓபிஎஸ் தரப்பு செயல்படுவதாக இபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளது
பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறி பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோர முடியாது இபிஎஸ் தரப்பு வாதம்
சிவகங்கை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 3 பேரும் வழக்கு தொடர உரிமையில்லை எனவும், ஓபிஎஸ் நேரடியாக வழக்கை தொடரவில்லை எனவும் இபிஎஸ் தரப்பு வாதம் வைத்துள்ளது.
இரட்டை தலைமை பதவிக்காலம் 2026 வரை உள்ளது என ஓபிஎஸ் தரப்பு வாதம்
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பில் ஜனநாயக விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக வைத்திலிங்கம் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
ஜெயலலிதாவே நிரந்தர பொதுச் செயலாளர் என்பதே தொண்டர்களின் விருப்பம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகித்த பதவியை வேறு யாரும் வகிக்க முடியாது என ஓபிஎஸ் தரப்பு வாதம் வைத்துள்ளது
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்குகள் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த ஓபிஎஸ் தரப்பு தடைகோரிய வழக்கு சற்று நேரத்தில் உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கவுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவுபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கு தடை கோரும் ஓபிஎஸ் தரப்பு மனு மீதான வழக்கு இன்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
ராமநாதபுரத்தில் தென் மாநில அளவிலான ஹாக்கி போட்டி தொடங்கியது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர்.
தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிக்குள்ளாக 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - ஒரு அறை முழுவதும் சேதமடைந்த நிலையில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்ப்பு
ஈகுவடார் மற்றும் பெருவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். பெரு எல்லை அருகே ஈகுவடாரின் பாலாவ் நகரை மையமாக கொண்டு 6.7 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஈகுவடார் மற்றும் பெருவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். பெரு எல்லை அருகே ஈகுவடாரின் பாலாவ் நகரை மையமாக கொண்டு 6.7 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
Background
302ஆவது நாள்:
சென்னையில் இன்று (மார்ச்.19) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து விலை மாற்றமின்றி 302ஆவது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
இதனை கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ.10ம் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது. அதன் பின்னர் 5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது. அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி சுமார் 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எத்தனால் கலந்த பெட்ரோல்
கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -