வானில் ஏற்படும் நிகழ்வுகளில் மிக மிக முக்கியமானது சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள். அறிவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 2025ம் ஆண்டில் சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் எப்போது? என்பதை கீழே விரிவாக காணலாம். 


நடப்பாண்டில் இரண்டு சந்திர கிரகணங்கள் மற்றும் 2 சூரிய கிரகணங்கள் நிகழ உள்ளது. வழக்கமாக சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள் உலகம் முழுவதும் தெரியாது. சில நாடுகளில் முழுமையாக தெரியும். சில நாடுகளில் குறிப்பிட்ட பகுதிகளில் தெரியும். சில நாடுகளில் தெரியாது. 


சந்திர கிரகணம்:


நடப்பாண்டிற்கான முதல் சந்திர கிரகணம் மார்ச் 14ம் தேதி நிகழ்கிறது. இந்த முதல் சந்திர கிரகணம் முழுமையாக நிகழ்கிறது. இந்த சந்திர கிரகணம் காலை 10.39 மணி முதல் மதியம் 2.18 மணி வரை அரங்கேறுகிறது. இந்த முதலாவது சந்திர கிரகணம் வட அமெரிக்காவில் வெறும் கண்களாலே மக்களால் பார்க்க முடியும். இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியாது. 


2வது சந்திர கிரகணம்:


இரண்டாவது சந்திர கிரகணம் செப்டம்பர் மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தெரியும். முழு சந்திர கிரகணமான இந்த கிரகணம் இந்தியா உள்பட ஆசிய நாடுகளில் தெரியும். செப்டம்பர் மாதம் 7ம் தேதி இரவு 9.56 மணிக்குத் தொடங்கி செப்டம்பர் 8ம் தேதி நள்ளிரவு 1.26 மணி வரை இந்த கிரகணம் தெரியும். 


சூரிய கிரகணம்:


நடப்பாண்டிற்கான முதல் சூரிய கிரகணம் மார்ச் 29ம் தேதி நிகழ்கிறது. இந்த கிரகணம் பகுதியாக தெரிகிறது. வட அமெரிக்காவில் இந்த கிரகணத்தை மக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம். இந்த கிரகணம் சர்வதேச நேரப்படி மதியம் 2.20 மணிக்குத் தொடங்கி மாலை 6.13 மணிக்கு முடிகிறது. இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க இயலாது. 


2வது சூரிய கிரகணம்:


இரண்டாவது சூரிய கிரகணம் பகுதி கிரகணமாக தெரிய உள்ளது. செப்டம்பர் மாதம் 21ம் தேதி மற்றும் 22ம் தேதி இந்த கிரகணம் தெரிய உள்ளது. சர்வதேச நேரப்படி இரவு 10.59 மணிக்குத் தொடங்கி அதிகாலை 3.23 மணிக்கு இந்த சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்த கிரகணத்தை நியூசிலாந்தில் நாம் காணலாம். இரண்டாவது சூரிய கிரகணத்தையும் இந்தியாவில் வெறும் கண்களால் காண இயலாது. 


சூரிய கிரகணத்தையும், சந்திர கிரகணத்தையும் வெறும் கண்களால் காண இயலாத நாடுகளில் தொலைநோக்கி வாயிலாக பார்க்க ஏற்பாடு செயயப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 


சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகண நாட்களில் கடலில் சில மாற்றங்கள் நிகழ்வதும், பூமியில் இயற்கை ரீதியாக பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறுவதும்  வழக்கமானது என்பது குறிப்பிடத்தக்கது. இதை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.