Breaking News LIVE: ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு - குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
சாதியால் யாரையும் தள்ளிவைக்கக் கூடாது என்ற நோக்கில் தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் சார்பில் 34 ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடத்தி வைத்தார். கலைஞர் கருணாநிதியின் வழிகாட்டுதலின்படி, திராவிட மாடல் அரசு பின்பற்றி செயல்பட்டு வருவதாகவும் திராவிட மாடல் திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றுவதாகவும் அவர் தெரிவித்தார். மணமக்களுக்கு தனது வாழ்த்துகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
Background
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் குஜராத் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடகாவில் நடந்த கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி மீது குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ.வான பூர்னேஷ் மோடி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த மார்ச் 23 ஆம் தேதி ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இதனைத் தொடர்ந்து அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி சூரத் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், ஒரு மனு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், மற்றொன்றில் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரியும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த 2 மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேசமயம் ராகுல்காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராகுல்காந்தி தன் மீதான தண்டனைக்கு எதிராக குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத்தாக்கல் செய்தார். கடந்த மே மாதம் இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது. அப்போது தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்த நீதிபதி ஹேமந்த் பிரசாக் கோடை விடுமுறைக்குப் பின் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.
தோனி பிறந்தநாள்
இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் தோனி இரண்டாவது இடத்தில் உள்ளார். 2023ம் ஆண்டு வெளியான தகவலின்படி, எம்.எஸ். தோனியின் நிகர சொத்து மதிப்பு 127 மில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது இந்திய மதிப்பின்படி, ரூ. 1040 கோடியாகும். சச்சின் டெண்டுல்கரின் சொத்து மதிப்பு ரூ. 1340 கோடிகள் என்று கூறப்படுகிறது.
தோனி ஆண்டுக்கு பிராண்ட் ஒப்புதல்கள் மூலம் சுமார் 27 மில்லியன் அமெரிக்க டாலர்களும், சிஎஸ்கே அணியின் ஒப்பந்தத்தின் மூலம் சுமார் 12 கோடியும் சம்பாதிக்கிறார்.
கார், பைக்குகள் மற்றும் விமானம்:
எம்.எஸ். தோனி கிரிக்கெட் மற்றும் கால்பந்தை கடந்து கார், பைக்கின் காதலராக அறியப்படுகிறார். இவர், தனது சூப்பர் மாடல் பைக் மற்றும் கார்களை அடுக்கி வைப்பதற்காகவே பிரத்யேக வீடு ஒன்றை கட்டியதாக கூறப்படுகிறது. இவரது சூப்பர் பைக்குகளின் சேகரிப்பில் தி ஹார்லி-டேவிட்சன் ஃபேட் பாய், கவாசாகி நிஞ்ஜா எச்2 மற்றும் எக்ஸ்132 ஹெல்கேட் உள்ளிட்ட பல்வேறு பைக்குகள் உள்ளன. இதுபோக கார் சேகரிப்பில், போன்டியாக் ஃபயர்பேர்ட், ஆர்மி-கிரேடு நிசான் 1 டன் மற்றும் ஹம்மர் எச்2 ஆகியவை உள்ளன.
மேலும், 260 கோடி மதிப்பிலான தனியார் ஜெட் விமானமும் தோனியிடம் இருப்பதாக கூறப்படுகிறது.
தொழிலதிபர் தோனி:
எம்.எஸ். தோனி செவன் மற்றும் ஸ்போர்ட்ஸ்ஃபிட் வேர்ல்ட் பிரைவேட் லிமிடெட் என்ற பிராண்டில் குறிப்பிடத்தக்க பங்குதாரராக உள்ளார். மேலும், Rhiti Group, KhataBook மற்றும் 7InkBrews நிறுவனங்களிலும் அவருக்கு பங்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. ராஞ்சியில் உள்ள ஹோட்டல் மஹி ரெசிடென்சியும் இவரது பெயரில் உள்ளது.
இந்தியாவில் பிரீமியர் லீக்குகளின் கீழ் சென்னையின் எஃப்சி கால்பந்து அணி, ராஞ்சி ரேஸ் ஹாக்கி அணி மற்றும் மஹி ரேசிங் டீம் இந்தியா ஆகியவற்றின் சொந்தக்காரர் தோனி.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -