Breaking News LIVE: ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது. இன்றைய தொடக்க போட்டியில் தென் கொரியா - ஜப்பான் அணிகள் மோதுகின்றன.
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியை இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஜம்மு & காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையை ஆகஸ்ட் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடுமுடி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி காசிபாளையம் காவிரி ஆற்றில் கோயிலுக்கு சென்றபோது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பூஜைக்காக காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுக்க சென்ற ஜெகதீஸ் (18), சௌத்ரி (14), குப்புராஜ் ( 17) ஆகியோர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்
மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட முயன்றால் நீதிமன்றம் செல்வோம். மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது. மேகதாதுவில் கர்நாடகா நில அளவீடு செய்வதால் மட்டுமே அணை கட்டிவிட முடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் இல்லாத நேரத்தில் அவரது வீட்டை உடைத்து அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடலூர் நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது சுரங்கத்தில் உள்ள இயந்திரத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அநீதிக்கு தொடர்ச்சியாக துணை நிற்கின்றனர் என்று சீமான் பேட்டி அளித்துள்ளார்.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவிப்பு - கலைஞர் நூற்றாண்டு விழா குறித்து காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் - முன்னதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் அவர் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்திருந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா 2வது நாளாக அவைக்கு வரவில்லை - எம்.பி.க்கள் கண்ணியமாக நடக்கும் வரை அவைக்கு வர மாட்டேன் என அவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருந்தது.
தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு கிண்டியில் உள்ள அவரது உருவ சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அவருடன் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், வளர்மதி, ஜெயக்குமார் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த நீதிமன்றம் அனுமதி - ஆய்வுக்கு அனுமதிக்கக்கூடாது என இஸ்லாமிய அமைப்பு தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்குகிறது - முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் இருந்து 75 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல்
கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை - மத்திய துணை ராணுவ வீரர்கல் உதவியுடன் 4 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு சந்தையில் உள்ளூர் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்தது - 16 கிலோ எடை கொண்ட ஒரு தக்காளி பெட்டி விலை ரூ.900 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்யப்படுகிறது.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் 9வது நாளாக தொடர் போராட்டம் - என்.எல்.சி.தலைமை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக ஒன்றியு செயலாளர் சாமிநாதன் வீடுகளில் நடந்த அமலாக்கத்துறையினர் சோதனை நிறைவு - முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்
Background
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 14 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில் , இன்றைய நிலவரத்தை அறியலாம்.
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 3) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 439வது நாளாக தொடர்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -