Breaking News LIVE: நெல்லை மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி. சிலம்பரசன் நியமனம்

BREAKING NEWS: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 05 Apr 2023 08:55 PM
நெல்லை மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி.

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிலம்பரசன் நியமிக்கப்பட்டுள்ளார். 

Breaking News LIVE: கொரோனாவால் கோவையில் ஒருவர் உயிரிழப்பு!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். புற்றுநோய், நீரிவு உள்ளிட்ட இணைநோய்களும் இருந்ததால், அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breaking News LIVE : "நிலக்கரி சுரங்கத்தை அரசு அனுமதிக்காது” - முதலமைச்சர் ஸ்டாலின்

நானும் டெல்டாகாரன்தான்; ஒருபோதும் நிலக்கரி திட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தெரிவித்திருக்கிறார்.

Breaking News Live : மத்திய அரசு உறுதி அளித்துள்ளது - முதலமைச்சர் ஸ்டாலின்

நிலக்கரி சுரங்கம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் கடிதத்துக்கு உரிய மதிப்பு அளிப்போம் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளதாக பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். 

Breaking News LIVE : விவசாயிகளுக்கு விரைவில் 24 மணி நேரமும் மின்சாரம்

விவசாயிகளுக்கு விரைவில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார்.

Breaking News LIVE : ரேசன் கடை பணியாளர் சங்க தலைவருக்கு அரிவாள் வெட்டு

சிதம்பரத்தில் ரேசன் கடை பணியாளர் சங்க தலைவர் ஜெயச்சந்திரா ராஜாவை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர்.

Breaking News LIVE : ஆளுநர் நிகழ்ச்சியில் ஏ.சி.யில் புகை வந்ததால் பரபரப்பு

கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏ.சி.யில் இருந்து புகை வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Breaking News Live : திருச்சி சிறப்பு முகாமில் 7 இலங்கை தமிழர்கள் விடுதலை

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு முகாமில் இருந்து 7 இலங்கை தமிழகர்கள் விடுதலை செய்யப்பட்டனர். வெளிநாடுகளில் இருந்து போலி பாஸ்போர்ட் மற்றும் விசா காலம் முடிந்தும் தங்கிய வழக்கில் இவர்கள் கைதாகினர். 

Breaking News LIVE : நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளத-

Breaking News LIVE: கலாஷேத்ராவில் செமஸ்டர் தேர்வுக்காக மாணவிகள் வருகை 

பேராசியர்கள் பாலியல் தொல்லை அளித்ததாக  புகாருக்குள்ளான திருவான்மியூர் கலாஷேத்ராவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செமஸ்டர் தேர்வுகள் மீண்டும் தொடக்கம் - 4 பேராசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மாணவிகள் தேர்வெழுத வருகை தந்துள்ளனர். 

Breaking News LIVE: பள்ளி வாகனம் கவிழ்ந்து 30 குழந்தைகள் காயம்

திருச்சி மாவட்டம் மாத்தூர் அருகே வடுகப்பட்டியில் பள்ளி வாகனம் கவிழ்ந்து 30 குழந்தைகள் காயம் - சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி 

Breaking News LIVE: பம்பையில் இன்று ஐயப்பனுக்கு ஆராட்டு விழா

பங்குனி உத்திரம் திருவிழாவையொட்டி பம்பையில் சபரிமலை ஐயப்பனுக்கு இன்று ஆராட்டு விழா நடைபெறுகிறது - நேற்றிரவு பள்ளி வேட்டை நிகழ்ச்சி நடந்த நிலையில் இன்று காலை 11.30 மணிக்கு திரு ஆராட்டு விழா நடக்கிறது

Background

சென்னையில்  பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளின் இன்றைய விலை நிலவரத்தை காணலாம். 


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில்,  முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றது. அந்த வரிசையில் இந்தியாவும்  முழு  முயற்சியில்  களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம் 


சென்னையில் இன்று (ஏப்ரல் 5) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து விலை மாற்றமின்றி இன்றோடு 319வது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.


இதனைக் கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.


அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என  தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.