Breaking News LIVE : அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மான வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு!

BREAKING NEWS: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

ஆர்த்தி Last Updated: 22 Mar 2023 08:55 PM
4 புதிய நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை..!

4 மாவட்ட நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை ஐகோர்ட் நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்துள்ளது.

Breaking News LIVE : பொதுக்குழு தீர்மான வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இதில். ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் வாதங்கள் முடிவடிந்துள்ளன.

பிரதமர் ஆலோசனை..!

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பதால் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4.30 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார். 

பொதுக்குழுவை ஒடுக்கவே வழக்கு - அதிமுக..!

அதிமுகவின் பொதுக்குழுவை ஒடுக்கவே வழக்கு தொடரப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதம் செய்து வருகிறது.  

Breaking News LIVE : காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 6 பேர் உயிரிழப்பு

காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 

காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..!

காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குருவி மலையில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து..

காஞ்சிபுரம் அடுத்து குருவி மலையில் பட்டாசு ஆலை குடோனில் திடீர் வெடி விபத்து, தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். 

Breaking News LIVE : கொரோனாவிலிருந்து குணமடைந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு கிழக்கு எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் என ராமச்சந்திரா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

Breaking News LIVE : இந்தியா - ஆஸி., ஒருநாள் போட்டி - சேப்பாக்கத்தில் குவியும் ரசிகர்கள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - ஆஸி., இடையேயான 3வது ஒருநாள் போட்டியை காண ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். அந்த பகுதியில் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது

Breaking News Live : திருவாரூரில் கலைஞர் கோட்டம் ஜூன் 3ல் திறப்பு

திருவாரூரில் கலைஞர் கோட்டம்-அருங்காட்சியகத்தை அகில இந்திய தலைவர்கள் ஜூன் 3ல் திறந்து வைக்கின்றனர். 

Breaking News Live : டெல்லி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல்

டெல்லி சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் கைலாஷ் கெலாட். டெல்லி நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதை அடுத்து, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

திமுகவில் மேலும் ஒரு கோடி பேரை சேர்க்க தீர்மானம்..!

திமுகவில் மேலும் ஒரு கோடி பேரை சேர்க்க திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது..

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழா தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

Breaking News LIVE : ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 வரை நீடிக்கிறது - ஓபிஎஸ் தரப்பு

ஒருங்கிணைப்பாளர் பதவி 2026ஆம் ஆண்டு வரை நீடிக்கிறது என உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதித்துள்ளனர்.

அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கின் விசாரணை தொடக்கம்..!

அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை தொடங்கியுள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையே ஒருநாள் போட்டி - சென்னையில் போக்குவரத்து மாற்றம்..

இந்தியா ஆஸ்திரேலியா இடையே 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. அதற்காக பெல்ஸ் ரோடு, கெனால் சாலை, வாலாஜா சாலை ஆகிய பகுதிகளில் இன்று நண்பகல் முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

Background

உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வருகிறது. ஆனாலும் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ளவில்லை. இந்தியாவும் அதற்கான முயற்சியில் முழு மூச்சாக களமிறங்கியுள்ளது. அதேசமயம் பெட்ரோல் டீசல் சம்பந்தமான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இதனால் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி வெகு விரைவில் தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கலாம். 


இந்தியாவில் 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருவதால்  பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. ஆக, எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும் என்பதால் ஒவ்வொரு நாளும் விலை நிலவரத்தை மக்கள் கண்காணித்து வருகிறார்கள்.


305வது நாள்:


சென்னையில் இன்று (மார்ச்.22) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து விலை மாற்றமின்றி 305வது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர். 


இதனை கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ.10ம் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது. அதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது. அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


எத்தனால் கலந்த பெட்ரோல்


கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என  தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.