Breaking News LIVE: தமிழ்நாட்டிற்கு கூடுதலாக உதவி தேர்தல் அலுவலர்கள் நியமனம் - இந்திய தேர்தல் ஆணையம்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

ஆர்த்தி Last Updated: 29 May 2024 09:16 PM
ரூ. 6.97 கோடி ஜிஎஸ்டி செலுத்த பிறப்பித்த ஆணைக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜிஎஸ்டி கூடுதல் இயக்குநரிடமிருந்து தமிழ்நாடு ஒழுங்குமுறை மின்பகிர்மானத்திற்கு பிறப்பிக்கப்பட்ட ரூ.6.97 கோடி ஜிஎஸ்டி செலுத்தவேண்டும் என்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. 

Breaking News LIVE: சென்னையில் அதிகபட்ச வெயில் பதிவானது!

சென்னையில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. இந்தாண்டில் சென்னையில் அதிகபட்ச அளவு இது. சென்னை மீனம்பாக்கத்தில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது. 


 

தீடீரென ரத்து செய்யப்பட்ட விமான சேவை - சேலத்தில் தவிக்கும் பயணிகள்!

பெங்களூரில் இருந்து சேலம் வழியாக கொச்சி செல்லும் விமானமும், கொச்சியில் இருந்து பெங்களூரு செல்லும் விமானமும் ரத்து செய்யப்பட்டதால் சேலம் விமான நிலையத்தில் பயணிகள் தவித்து வருகின்றனர். மேலும் விமானக் கட்டணத்தினை விமான நிறுவனம் திருப்பித் தரவேண்டும் எனவும் முறையிட்டு வருகின்றனர். 

Breaking News LIVE: தமிழ்நாட்டிற்கு கூடுதலாக உதவி தேர்தல் அலுவலர்கள் நியமனம் - இந்திய தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டிற்கு கூடுதலாக உதவி தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Breaking News LIVE: சிங்கபூரில் இருந்து வந்த பயணி; ஒரு கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் - திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு!

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணி ஒருவரிடம் இருந்து சுமார் ரூ. 1.3 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கத்தினை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். 

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி பிரஜ்வல் ரேவண்ணா மனு

பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில், தன் மீது தொடரப்பட்ட பாலியல் வழக்கில் முன் ஜாமீன் வழங்கப்படவேண்டும் என முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா மனு அளித்துள்ளார். பிரஜ்வல் ரேவண்ணாவை கர்நாடக காவல்துறை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்ய திட்டமிட்டிருப்பதால், கைது நடவடிக்கையைத் தவிர்க்க பிரஜ்வல் ரேவண்ணா முன் ஜாமீன் கோரியுள்ளார். 

குடிநீரைப் பயன்படுத்தி கார் கழுவினால் ரூ.2000 அபராதம் - டெல்லி அரசு திட்டவட்டம்!

குடிநீரைப் பயன்படுத்தி கார் கழுவினால், குடிநீரை தொட்டியில் அதிகப்படியான குடிநீரைச் சேமித்து வைத்தாலும் ரூபாய் 2,000 அபராதம் விதிக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இதனைக் கண்காணிக்க தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது. 

Breaking News LIVE: நாளை கேரளாவில் தொடங்கும் தென் மேற்கு பருவமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்..

அடுத்த 24 மணி நேரத்தில் கேரளா மாநிலத்தில் தென் மேற்கு பருவ மழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கேரளாவில் பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுலம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கோவை கே.எம்.சி.ஹெச் தொழிலாளி மருத்துவமனையில் அடித்துக் கொலை - உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு!

கோவையில் உள்ள கே.எம்.சி.ஹெச் தொழிலாளி  ராஜா என்பவர் மருத்துவமனைக்குள் புகுந்து திருட முயன்றதாகக் கூறி மருத்துவமனை வளாகத்தில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டதால் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து, சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 

Breaking News LIVE: ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில், 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

Breaking News LIVE: ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில், 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே மூன்று நாட்களுக்கு மிதமான மழைப்பொழிவு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Elephant Rescue Nilgiris : 10 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட யானை குட்டி!

நீலகிரி கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில், 26 அடி கிணற்றில் விழுந்த யானைக்குட்டி 10 மணிநேர போராட்டத்துக்கு பின்பு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது

Manivannan Biopic : “மறைந்த நண்பர் மணிவண்ணன் போன்ற ஒரு இயக்குநர் மோடி Biopic எடுத்தா நல்லா இருக்கும்” - நடிகர் சத்யராஜ்

“மறைந்த நண்பர் மணிவண்ணன் போன்ற ஒரு இயக்குநர் மோடி Biopic எடுத்தா நல்லா இருக்கும்” 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேட்டி

Breaking News LIVE: பிரிஜ் பூஷண் மகனின் பாதுகாப்பு வாகனம் மோதி 2 பேர் உயிரிழப்பு..!

உத்திர பிரதேசத்தில் பிரிஜ் பூஷண் மகனின் பாதுகாப்பு வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்தனர். உ.பியில் கோண்டாவில் நடந்த விபத்தில் ஒருவர் படுகாயம். 

கோவை : கே.எம்.சி.எச் மருத்துவமனையில் திருட வந்ததாகக் கூறி ராஜா என்பவர் அடித்துக் கொலை.

கோவை : கே.எம்.சி.எச் மருத்துவமனையில் திருட வந்ததாகக் கூறி ராஜா என்பவர் அடித்துக் கொலை. ராஜாவின் மனைவி அளித்த புகாரில் மருத்துவமனை காவலாளிகள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை! கே.எம்.சி.எச் மருத்துவமனை நிர்வாகத்தின் பெயரை சேர்க்காவிட்டால் ராஜாவின் உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் போராட்டம்!

Breaking News LIVE: ஜாமீனை நீட்டிக்கக் கோரிய கெஜ்ரிவால் மனு தள்ளுபடி..!

ஜாமீனை நீட்டிக்கக் கோரிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். இடைக்கால ஜாமீனை 7 நாட்கள் நீட்டிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். 

Breaking News LIVE: சென்னையில் வாக்கு எண்ணும் பணியில் 1,430 பேர் - மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்..!

சென்னையில் வாக்கு எண்ணும் பணியில் 1,430 பேர் ஈடுபட உள்ளனர் என்றும் வாக்கு எண்ணும் மையங்களில் 922 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

”முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன், மீண்டு வருவேன்”.. வைகோ தனது உடல்நிலை குறித்து வீடியோ வெளியீடு!

All eyes on Rafah தொடர்ச்சியாக ட்ரெண்டாகி வருகிறது. காஸா மக்களுக்கான ஆதரவு தெரிவிக்கப்படுகிறது

Breaking News LIVE: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!

தென் தமிழ்நாட்டு பகுதியில் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Breaking News LIVE: கேரளாவில் 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!

கேரளாவில் இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுலம் உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Background

தமிழ்நாட்டில் கோடை மழை முடிந்த நிலையில், கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்படுகிறது. காய்கறி வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது என காய்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கோயம்பேடு சந்தையில் இருந்து தான் வியாபாரிகள் தங்கள் பகுதிகளில் இருக்கும் கடைகளுக்கு வாங்கிச் செல்வார்கள். இதனால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உதாரணத்திற்கு கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வியாபாரத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ. 70 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். 


அதேபோல், கோடை மழை முடிவுக்கு வந்துள்ள நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக 41.3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. 


இதற்கிடையில், 2024 மக்களவைத் தேர்தலின் இறுதிக் கட்ட வாக்குப்பதிவிற்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி ஏபிபி செய்தி குழுமத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அமோக ஆதரவுடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்ததோடு,  இடஒதுக்கீடுகள்,மேற்கு வங்க மாநில ஊழல் மற்றும் அந்த மாநிலத்தில் ரெமால் புயல் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் விரிவாக பேசியுள்ளார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.