Vidamuyarchi Update : திரிஷாவின் கணவராக நடிக்கவிருக்கும் அஜித் குமார்.. விடாமுயற்சி படத்தின் புது புது அப்டேட்!
மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது அஜித் குமார், அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் படப்பிடிப்பில் பிசியாக உள்ளனர்
ஜூலை 2 அல்லது 3 ஆம் தேதி அன்று படப்பிடிப்பில் த்ரிஷா இணைய உள்ளதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஷூட் எடுக்கப்பட்ட நிலப்பரப்பு படத்தில் பெரும் பங்கு வகிக்கும் என்றும் படம் பார்க்கும் போது அது ஒரு தனி அனுபவத்தை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது
படத்தின் முதல் கட்ட படப்பிப்பு ஒரு நாளைக்கு 4 - 5 மணி நேரம் மட்டும் நடந்ததாகவும், இனிமேல் ஒரு நாளைக்கு 14 - 15 மணி நேரம் சூட்டிங் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆகஸ்ட் மாதம் இரண்டாம் அல்லது மூன்றாம் வாரத்தில் படத்தின் எஞ்சிய வேலைகள் நடக்க உள்ளதாகவும், படம் தீபாவளிக்கு வெளியாகலாம் என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.