தமிழக அரசு இன்று பல்வேறு துறைகளின் செயலாளர்களை மாற்றி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ள உத்தரவின்படி,


சுற்றுலா, ஊரக வளர்ச்சித்துறை:


சுற்றுலாத்துறை செயலாளர் மணிவாசன் நீர்வளத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் பணியிடம் மாற்றப்பட்டு சுற்றுலாத்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


கால்நடை, மீன்வளத்துறை துறை செயலாளரான மங்கத்ராம் சர்மா பணியிடம் மாற்றப்பட்டு பொதுப்பணித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் பணியிடம் மாற்றப்பட்டு சுற்றுச்சூழல் வனத்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பதவியை வகித்து வந்த சுப்ரியா சாஹூ மக்கள் நல்வாழ்வுத்துறையான சுகாதாரத்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


ககன்தீப்சிங் பேடி, பிரதீப் யாதவ்:


மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக பொறுப்பு வகித்து வந்த ககன்தீப்சிங் பேடி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத் ராஜ் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைத்துறை செயலாளராக பதவி வகித்து வந்த பிரதீப்யாதவ் உயர்கல்வித்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைத்துறை செயலாளராக டாக்டர்.ஆர்.செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.


தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழக மேலாண் இயக்குனர் ஜான் லூயிஸ் பணியிடம் மாற்றப்பட்டு சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை இயக்குனர் விஜயலட்சுமி பணியிடம் மாற்றப்பட்டு இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி  இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.


நிலச்சீர்த்திருத்த துறை ஆணையர் வெங்கடாச்சலம் பணியிடம் மாற்றப்பட்டு காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். நிலச்சீர்த்திருத்த துறை ஆணையராக ஹரிஹரன் நியமிக்கப்பட்டுள்ளார். போக்குவரத்து துறை சிறப்புச் செயலாளராக லில்லி நியமிக்கப்பட்டுள்ளார்.


சந்தீப் சக்‌ஷேனா:


தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித துறை செயலாளராக சந்தீப் சக்ஷேனா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு தொழிற்துறை முதலீட்டு கழக சேர்மன் மற்றும் மேலாண் இயக்குனராக சாய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு உப்பு கழக நிறுவன மேலாண் இயக்குனராக மகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி மேலாண் இயக்குனர் பொறுப்பை வைத்திநாதன் கூடுதல் பொறுப்பாக கவனிக்க உள்ளார்.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசு தற்போது முக்கிய துறைகளின் செயலாளர்களை அதிரடியாக மாற்றியுள்ளது. இது அரசு நிர்வாக நடவடிக்கையில் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.


மேலும் படிக்க:முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!


மேலும் படிக்க: உடுமலையில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுகிறது - பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு