Breaking News LIVE: குவைத் தீ விபத்து: உதவி எண்கள் அறிவித்த தமிழ்நாடு அரசு

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 12 Jun 2024 11:50 PM
Breaking News LIVE: குவைத் தீ விபத்து - பில்டிங்கில் இருந்தவர்களின் விவரங்கள் வெளியானது..!

பில்டிங்கில் இருந்தவர்கள் - 195 மொத்தம்



  • டூட்டிக்கு போனவர்கள் - 18

  • மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பவர்கள் -61

  • காணவில்லை- 49 (இறந்தவர்களாக இருக்கலாம்)

  • நலமுடன் இருப்பர் 67


அரசு மருத்துவமனை பெயர்கள்:


முபாரக்கியா -11
ஜெகரா-  4
பர்வானியா - 4
அதான் - ICU - 1
மருத்துவமனையில் 61
காணவில்லை 49

Breaking News LIVE: குவைத் தீ விபத்து: உதவி எண்கள் அறிவித்த தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 


இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் உதவி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


இந்தியாவிற்குள் - +91 1800 309 3793


வெளிநாடு - +91 80 6900 9900, +91 80 6900 9901

ஜி 7 மாநாட்டில் பங்கேற்க நாளை இத்தாலி செல்கிறார் பிரதமர் மோடி

இத்தாலியில் நடைபெறும் ஜி 7 மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி நாளை இத்தாலிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். 

Breaking News LIVE: விஜய பிரபாகரன் புகார் மனு 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
 
இந்நிலையில் விஜய பிரபாகரன் இன்று டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என மனு அளித்துள்ளார். 

Breaking News LIVE: குவைத் கட்டட தீ விபத்து: 40 இந்தியர்கள் உட்பட 53 பேர் உயிரிழப்பு

குவைத் நாட்டில் உள்ள 7 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட விபத்தில் 40 இந்தியர்கள் உட்பட 53 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

Breaking News LIVE: சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என கூறி இணைப்பை துண்டித்துள்ளார். 


வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து விமான நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

Breaking News LIVE: மறுவாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவை அறிவிக்கட்டும் - விஜய பிரபாகரன் பேட்டி

டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தபின் விஜய பிரபாகரன் பேட்டியளித்தார். அதில், விருதுநகரில் வாக்கு எண்ணிக்கையின்போது குளறுபடி. வாக்கு எண்ணிக்கையை மீண்டும் நடத்த கோரிக்கை வைத்துள்ளோம். ஒரு வாரத்தில் முடிவு தெரிவிப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மறுவாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவை அறிவிக்கட்டும், மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம் என்று தெரிவித்தார். 

Breaking News LIVE: ஒடிசா முதலமைச்சராக மோகன் சரண் மஜி பதவியேற்பு..!


ஒடிசா மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த முதல் முதலமைச்சராக மோகன் சரண் மஜி பதவியேற்றுக் கொண்டார். ஒடிசா மாநில துணை முதலமைச்சர்களாக கே.வி.சிங், பிரவதி பரிதா ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர். 

Breaking News LIVE: குவைத் தீ விபத்து - பிரதமர் மோடி இரங்கல் 

 


குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டு 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 


மேலும் குவைத் தீ விபத்து சம்பவத்தின் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பாதிக்கப்பட்டோருக்கு இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

Breaking News LIVE: செல்வபெருந்தகை விளக்கம்

திமுக - காங்கிரஸ் கூட்டணி கொள்கை சார்ந்த கூட்டணியே தவிர சந்தர்ப்பவாத கூட்டணி இல்லை என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார். 


”எஃகு கோட்டை போல் இருக்கும் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த எவர் முயற்சித்தாலும் அது நிச்சயம் நிறைவேறாது. பொதுக்குழுவில் எனக்கு பிறகு பேசியவர்கள் கருத்துக்கள் திரித்து வெளியிடப்பட்டுள்ளன” என குறிப்பிட்டார். 


காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது குறித்து செல்வபெருந்தகை பேசிய பேச்சு சர்ச்சையான நிலையில் இப்போது விளக்கம் கொடுத்துள்ளார் 

Breaking News LIVE : புஷ்பா 2 ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு

முதல் பாகத்தில் பெரும் வசூலை குவித்த புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம், ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதன் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதாக தகவல் பரவி வருகிறது.

Breaking News LIVE: வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல் காந்தி?
Breaking News LIVE: நீர் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நீட் தேர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. கடந்த மாதம் நடந்த நீட் தேர்வை ரத்து செய்துவிட்டும் மீண்டும் மறுத்தேர்வு நடத்த வேண்டும் என மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 


நீட் தேர்வி 1500 பேருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவதில் குளறுபடி நடைபெற்றுள்ளதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 


இந்நிலையில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது. 

Breaking News LIVE: சேலம் விபத்தில் 4 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு..!

சேலம் வலசையூர் அருகே சுக்கம்பட்டியில் சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரணம் முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதன்படி, விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

Breaking News LIVE: குவைத் தீ விபத்து - உயிரிழந்தோருக்கு ஜெய்சங்கர் இரங்கல்..!

குவைத் மங்காஃப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்தில் 40க்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். 


குவைத் தீ விபத்து தொடர்பாக +965-65505246 என்ற உதவு எண்ணினை அறிவித்தது இந்திய வெளியுறவுத்துறை. 

Breaking News LIVE: கள்ளக்கடல் எச்சரிக்கை நாளை இரவு வரை நீட்டிப்பு..!

தமிழ்நாட்டின்  4 மாவட்ட கடற்கரைகளுக்கான கள்ளக்கடல் நிகழ்வு நாளை இரவு 11.30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் லேசான கடல் சீற்றம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Breaking News LIVE: எடப்பாடியால் அதிமுக அழிந்து வருகிறது - டிடிவி தினகரன்

எடப்பாடி பழனிசாமியால்தான் அதிமுக தொடர்ந்து 10 தேர்தல்களில் தோல்வியடைந்து அழிந்து வருகிறது. அதிமுகவுடன் அமமுக இணையுமா என்கிற கேள்விக்கே இடம் இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

Breaking News LIVE: ஏழைகள்தான் எனது கடவுள் - ராகுல் காந்தி

மோடியிடம் பேசுவதுபோல் என்னிடம் பேச பரமாத்மா இல்லையே. எனது கடவுள் நாட்டின் ஏழை மக்கள்தான் என்று வயநாடு கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியுள்ளார். 

குறுகிய காலத்தில் பேரவை கூட்டத்தொடரை நடத்தும் நிலை உருவாகியுள்ளது" - சட்டப்பேரவை மானிய கோரிக்கை கூட்டத்தொடர் குறித்து சபாநாயகர் அப்பாவு பேட்டி

"விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், குறுகிய காலத்தில் பேரவை கூட்டத்தொடரை நடத்தும் நிலை உருவாகியுள்ளது" - சட்டப்பேரவை மானிய கோரிக்கை கூட்டத்தொடர் குறித்து சபாநாயகர் அப்பாவு பேட்டி

Nandamuri Balakrishna : சகோதரியும் முதல்வரின் மனைவியுமான நாரா புவனேஷ்வரியை முத்தமிட்டு வாழ்த்திச்சென்ற நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா!

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற விழா மேடையில், தன் சகோதரியும் முதல்வரின் மனைவியுமான நாரா புவனேஷ்வரியை முத்தமிட்டு வாழ்த்திச்சென்ற நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா!

"வெறும் 60 லட்சம்தான்" - அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்த பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன்

"2 கோடி உறுப்பினர் உள்ளதாக சொல்லும் அதிமுக, கூட்டணியாக வாங்கிய வாக்குகளே வெறும் 60 லட்சம்தான்" - அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்த பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன்

Rahul Gandhi Speech : எந்த தொகுதியின் எம்.பியாக தொடர்வது என்பதை மக்களை கேட்டு முடிவு செய்வேன் - ராகுல் காந்தி

“எந்த தொகுதியின் எம்.பியாக தொடர்வது என்பதை மக்களை கேட்டு முடிவு செய்வேன்” வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் ராகுல் காந்தி எம்.பி. பேச்சு!

CM Stalin - CM Chandrababu Naidu : முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்துக்கள்.. தமிழக - ஆந்திர உறவு வலுப்படும் என்னும் நம்பிக்கை கொள்கிறேன் - முதல்வர் ஸ்டாலின்

கேரளாவின் இடுக்கியில் மண் சரிவு : நல்வாய்ப்பாக தொழிலாளர்கள் மீட்பு

கேரளாவின் இடுக்கியில் தேசிய நெடுஞ்சாலை பணியின்போது மண் சரிந்து விழுந்ததில் தமிழ்நாட்டின் தென்காசியை சேர்ந்த காளிசாமி நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார் தடுப்பு சுவர் அமைக்கும்போது மண் சரிந்ததில் கேரளாவை சேர்ந்த ஜோன்ஸ் மற்றும் காளிசாமி சிக்கிய நிலையில், தீயணைப்புத்துறையினர் இருவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர்

Rahul Gandhi in Kerala : அரசியல் சாசனம் எங்கள் குரல்.. அதை தொடாதே என மக்கள் சொல்லியிருக்கிறீர்கள் - ராகுல் காந்தி

Amitshah Warns Thamizhisai Soundararajan : பாஜக உட்கட்சி பூசல்.. தமிழிசையை அழைத்துப்பேசிய அமித்ஷா கண்டித்தாரா? வீடியோ வைரல்

முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு : நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் மோடி

World Day Against Child Labour : ஜூன் 12: குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச நாள்

June 12 World Day Against Child Labour: குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச நாள் இன்று ஜூன் 12-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இன்றைய நாளின் கருப்பொருள், “நம் கடமைகளை கருத்தில் கொண்டு செயல்படுவோம் : குழந்தை தொழிலாளர் நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” என்பதே

Kerala Highcourt On Life Partner Right : வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் உரிமையை பெற்றோரின் அன்பு கட்டுப்படுத்தாது -கேரள உயர்நீதிமன்றம்

பிள்ளைகள் தங்களின் வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் உரிமையை பெற்றோரின் அன்பு கட்டுப்படுத்தாது -கேரள உயர்நீதிமன்றம்

தென்கொரியாவின் கட்டாய ராணுவ சேவையை நிறைவு செய்தார் BTS இசைக்குழுவின் ஜின்!

தென்கொரியாவின் கட்டாய ராணுவ சேவையை நிறைவு செய்தார் BTS இசைக்குழுவின் ஜின்! 18 - 35 வயதுடைய இளைஞர்கள் கட்டாயம் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பது அந்நாட்டு விதி

Vilavancode ByElection : விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக தாரகை கத்பர்ட் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்

Vilavancode ByElection : விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக தாரகை கத்பர்ட் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்   





Actor Darshan Thoogudeepa : கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷன் : சட்டம் தன் கடமையை செய்யும் என்று அமைச்சர் பரமேஷ்வரா

Nifty Breaches previous high of 23,411.9 mark : உச்சம் தொட்ட நிஃப்டி.. 23,411.9 ஐ எட்டிய நிஃப்டி

Vijayaprabhakaran : தேர்தல் ஆணையரை இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகர் சந்திக்க உள்ளதாக தகவல்!

Vijayaprabhakaran : விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை கோரி தலைமை தேர்தல் ஆணையரை இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகர் சந்திக்க உள்ளதாக தகவல்!

Breaking News LIVE: ஜூன் 24-ஆம் தேதி கூடுகிறது மக்களவை: ஜூலை 3 வரை நடைபெறும் என தகவல்

June 24 - July 3 Lok sabha : ஜூன் 24-ஆம் தேதி கூடுகிறது மக்களவை: ஜூலை 3 வரை நடைபெறும் என தகவல்

ஜம்மு காஷ்மீர் : கண்டி வனப்பகுதியில் பரவிய தீ.. பரபர வீடியோ காட்சிகள்

ஜம்மு காஷ்மீர் : கண்டி வனப்பகுதியில் பரவிய தீ.. பரபர வீடியோ காட்சிகள்





Suresh Gopi : கேரளாவில் கோழிக்கோடில் தலி மஹா சிவ ஷேத்ரம் கோயிலில், வழிபட்ட மத்திய அமைச்சர், நடிகர் சுரேஷ் கோபி..

Hindu Makkal Katchi Udaiyar : இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் உடையார் கைது - கட்சியிலிருந்தும் அதிரடி நீக்கம்!

Hindu Makkal Katchi Udaiyar : இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் உடையார் கைது - கட்சியிலிருந்தும் அதிரடி நீக்கம்!


”பாஜக வளரவேண்டும் என்றால் தமிழகத்தில் கலவரம் செய்யவேண்டும்” என்று கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாக அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர்  உடையாரை கைது செய்தனர்.

Jammu and Kashmir : 3 நாட்களில் நிகழ்ந்த மூன்று தீவிரவாத தாக்குதல்களில் 6 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு

Jammu and Kashmir : 3 நாட்களில் நிகழ்ந்த மூன்று தீவிரவாத தாக்குதல்களில் 6 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு

Chandrababu Naidu Rajinikanth : நேற்றிரவு சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்புக்காக விஜயவாடா வந்திறங்கிய ரஜினிகாந்த்.. வீடியோ காட்சிகள்..

கோவை: ஈஷா யோகா மையத்தில் நடிகை கங்கனா வழிபாடு

கோவை: ஈஷா யோகா மையத்தில் நடிகை கங்கனா வழிபாடு





Tirupathur Rajesh Snake Curry : திருப்பத்தூர் அருகே சாரை பாம்பை கொன்று தோல் உரித்து கறியாக்கி சாப்பிட்ட ராஜேஸ் என்ற இளைஞர் கைது

தொட்டா போச்சு.. ஆதார் பெயரில் மோசடி முயற்சி.. தெளிவாக்கும் TN Fact Check

Chandrababu Naidu : சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்பு.. விஜயவாடாவில் மும்முரமான ஏற்பாடுகள்..

Breaking News LIVE: ஒடிசா மாநில புதிய முதலமைச்சராக மோகன் மாஜி இன்று பதவியேற்பு!

Breaking News LIVE: ஒடிசா மாநில புதிய முதலமைச்சராக மோகன் மாஜி இன்று பதவியேற்பு! 4-வது முறையாக பாஜக எம்.எல்.ஏவாக தேர்வாகியுள்ளார் மோகன். மொத்தமுள்ள 147 தொகுதிகளில், 78-இல் வெற்றிபெற்று முதன்முறையாக பெரும்பான்மையாக ஆட்சி அமைக்கிறது பாஜக.

Shivdas Meena : மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா கடிதம்!

கல்வி முறை மற்றும் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா கடிதம்!

Chandrababu Naidu Cabinet : சந்திரபாபு நாயுடு தலைமையில் பதவியேற்க உள்ள அமைச்சரவை பட்டியல் வெளியீடு

சந்திரபாபு நாயுடு தலைமையில் பதவியேற்க உள்ள அமைச்சரவை பட்டியல் வெளியீடு. ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் உள்ளிட்ட 24 பேர் அமைச்சர்களாக பதிவி ஏற்க உள்ளனர்

புதுச்சேரி கழிவு நீர் வாய்க்கால் அடைப்பு மற்றும் அதை தூய்மைப்படுத்துதல் சம்பந்தமான புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்.

புதுச்சேரி கழிவு நீர் வாய்க்கால் அடைப்பு மற்றும் அதை தூய்மைப்படுத்துதல் சம்பந்தமான புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்.


இன்று நடந்தது போல் சோகமான கழிவு நீர் குழாய் விஷவாயு சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுச்சேரி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மக்கள், தங்களது சுற்றுப்புறத்தில் உள்ள கழிவுநீர்த்தொட்டி மற்றும் கழிவு நீர் வாய்க்கால் அடைப்பு மற்றும் அதை தூய்மைப்படுத்துதல் சம்பந்தமான புகார்கள் மற்றும் தகவல்களை, புதுச்சேரி உள்ளாட்சித் துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ள, பொதுப்பணித்துறை அலுவலகத்தில் செயல்படும் 'அவசர கழிவுநீர் நடவடிக்கை குழுவின் "14420" என்ற கட்டணமில்லா தொலைபேசியை தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இக்குழுவின் மூலம் பொதுப்பணித்துறையில் கழிவு நீர் சுகாதாரப் பிரிவு மற்றும் அந்தந்த நகராட்சிகளுடன் இணைந்து எடுக்கப்படும் -


உள்ளாட்சித்துறை இயக்குனர் சக்திவேல்

புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு

புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறக்கப்படும் இன்றைய தினமே மாணவர்களுக்கான புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்க கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. 


மேலும் புதிதாக பள்ளி வரும் மாணவர்களை வரவேற்கும் விதமாக பள்ளிகள் ஆசிரியர்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Background


  • விக்கிரவாண்டி இடைதேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என அறிவிப்பு

  • அமைச்சர் செஞ்சி மஸ்தான் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் 

  • "ஆஸ்திரேலியாவில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள சர்வதேச கராத்தே போட்டியில் விளையாட உள்ள வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவி செய்ய வேண்டும்" - சென்னை மாவட்ட கராத்தே பயிற்சியாளர் தமிழரசன் கோரிக்கை புனேவில் கடந்த 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெற்ற ஆசிய கராத்தே போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 வீரர்கள் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

  • மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து, வரும் 13ம் தேதி தனது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்கிறார் - மூன்று நாள் பயணத்தின் போது இத்தாலியில் நடைபெறும் ஜி-7 உச்சிமாநாட்டில் பங்கேற்க இருக்கிறார்

  • வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டு இருந்தால் மோடியை வீழ்த்தி இருப்பார் - ரேபரேலி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு

  • இந்திய ராணுவத்திற்கான புதிய தளபதியான உபேந்திர திவேதி நியமனம் - குன் 30ம் தேதி பொறுப்பேற்கிறார்

  • ஆந்திர முதலமச்சராக இன்று பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு - 20 பேர் அடங்கிய புதிய அமைச்சரவை பட்டியல் வெளியீடு - பவன் கல்யாண் துணை முதலமைச்சராக வாய்ப்பு

  • சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கிய வழக்கில் அத்பர் ஜோ பைடன் மகன் குற்றவாளி என தீர்ப்பு

  • ஐசிசி டி-20 உலகக் கோப்பைய்ல் இன்று நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோதுகின்றன

  • அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் அணி, நேற்றைய கனடாவிற்கு எதிரான லீக் போட்டியில் வெற்றி

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.