கல்கி 2898 ஏடி


நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சைன்ச் ஃபிக்ஹன் படம் கல்கி 2898 ஏடி. அமிதாப் பச்சன் , கமல்ஹாசன் , தீபிகா படூகோன் , பசுபதி , ஷோபனா , அனா பென் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். விஜய் தேவரகொண்டா , மிருணால் தாக்கூர் , ராஜமெளலி , ராம் கோபால் வர்மா , திஷா பதானி , துல்கர் சல்மான் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் கெளரவத் தோற்றத்தில் நடித்துள்ளார்கள். வைஜயந்தி மூவீஸ் தயாரித்துள்ள இப்ப்டத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கடந்த ஜூன் 27 ஆம் தேதி இப்படம் தமிழ் . தெலுங்கு , கன்னடம் , இந்தி , மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியது.


கல்கி முதல் நாள் வசூல்


மகாராபாரதப் போர் முடிந்து 6 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் கதை கல்கி. புராணக் கதைகளில் வரும் கதாபாத்திரங்களை வைத்து சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் நாக் அஸ்வின். படத்தின் திரைக்கதை மீது கலவையான விமர்சனங்கள் வைக்கப் பட்டாலும் தொழில்நுட்ப ரீதியாக படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. குறிப்பாக ஸ்பெஷல் எஃபக்ஸ் காட்சிகள் உலக தரத்தில் அமைந்துள்ளதாக விமர்சகர்கள் கூறியுள்ளார்கள்


விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெறும் கல்கி வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய இலக்கை எட்டியுள்ளது. முதல் நாளில் உலகளவில் ரூ 175 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆர்.ஆர்.ஆர் , பாகுபலி  ஆகிய படங்களுக்குப் பின் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படங்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது கல்கி படம். முதல் வாரத்திற்குள்ளாக படம் ரூ 500 கோடி வசூல் இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப் படுகிறது.


கல்கி 2


கல்கி 2898 ஏடி படம் ரசிகர்களிடம் அடுத்த பாகம் தொடர்பான பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக முதல் பாகத்தில் கமல்ஹாசன் மற்றும் பிரபாஸ் இருவருக்கும் குறைவான காட்சிகளே இருந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் பாகத்தில் இவர்களுக்கு இன்னும் அதிக காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் என்பதால் இதற்கு இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படலாம். நேர்காணல் ஒன்றில் கல்கி இரண்டாம் பாகத்தை எடுத்து முடிக்க இன்னும் மூன்று ஆண்டுகள் தேவைப்படும் என்று இயக்குநர் நாக் அஸ்வின் தெரிவித்துள்ளார். 




மேலும் படிக்க : Kalki 2898 AD Collection: உலகளவில் வெளியாகி ஒரு கலக்கு கலக்கும் கல்கி! முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?


Ilayaraja : இளையராஜா குரலில் டைட்டில் பாடல் வந்தால் படம் ஹிட்டா! இத்தனை டைட்டில் பாட்டு பாடி இருக்காரா...