Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
"ஐரோப்பிய கவுன்சிலின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எனது நண்பர் அன்டோனியோ கோஸ்டாவுக்கு வாழ்த்துகள், இந்தியா-ஐரோப்பிய கூட்டாண்மையை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்ல, உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்" என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
தெலங்கானா கண்ணாடி ஆலையில் விபத்து ஏற்பட்டதில் 6 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் கிடைத்ததற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ஈரோடு கோவிந்தராஜ் நகரை சார்ந்த மதனகோபால் என்பவர் தனது தந்தை பழனியப்பனுக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்த ஒரு கோடி பணத்தை காரில் கொண்டு வந்த போது கண்டாச்சிபுரம் அடுத்த மழவந்தாங்கல் சோதனை சாவடியில் போலீசார் சோதனை செய்த போது ஒரு கோடி பணம் இருந்ததை அடுத்து ஒரு கோடி பணத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை.
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிக்களுக்கான இ-பாஸ் வழங்கும் நடைமுறை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு உத்தரவிட்டுள்ளது.
நீட் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு இடையே, எழுந்த அமளியால் மக்களவையில் ஜூலை 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதுதொடர்பாக பாஜக எம்பியும், நடிகையுமான நடிகர் கங்கனா ரனாவத் கூறுகையில், "அவர்களின் நடத்தையை நீங்கள் அங்கு பார்த்தீர்கள். சபாநாயகரும் அவர்களைக் கண்டித்தார்கள்.. ஆனால் அவர்கள் (எதிர்க்கட்சி) யாருடைய பேச்சையும் கேட்கத் தயாராக இல்லை என்று தெரிகிறது. நாங்கள் முதல்முறையாக இங்கு வந்துள்ளோம், நாங்களும் திகைத்துப் போனோம். என்ன நடந்தது. குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை மறந்துவிட்டு அவர்கள் யாரையும் பேச விடாமல் இருப்பது வருத்தமாக இருந்தது” என தெரிவித்தார்.
சீமான் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “‘பணம் படைத்தவர்களால் மட்டுமே தரமான கல்வியைப் பெற முடியும், ஏழைகளுக்கு நல்ல கல்வி என்பது எட்டாக்கனி’ எனும் ஏற்றத்தாழ்வு மிகுந்த சமகாலத்தில், ஏழை - பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ - மாணவியரை அழைத்து, பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும், என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், என் அன்புத்தளபதி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!” என குறிப்பிட்டுள்ளார்.
மக்களவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு, நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உடனடியாக விவாதிக்க வேண்டும் என, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், அந்த கோரிக்கை ஏற்கப்படாததால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் விஷச் சாராயம் குடித்து 60 பேர் உயிரிழந்தது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். மேலும் இதுகுறித்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், சிபிஐ விசாரிக்க வலியுறுத்தி ஆளுநரிடம் பிரேமலதா மனு அளித்தார்.
நில மோசடி வழக்கில் கடந்த ஜனவரி மாதம் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு முறைகேடு குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து, பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவி பிரதிக்ஷா என்ற மாணவிக்கு வைர கம்மல் வழங்கி சால்வை அணிவித்து மரியாதை. மேலும் மூன்று மாணவர்களுக்கும் அதே பரிசு வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியைச் சேர்ந்த மாணவி மகாலட்சுமி,
சால்வை அணிவித்து வைர கம்மல் வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தொகுதி மாணவி தோஷிதா லட்சுமி வைர கம்மல் பரிசு. தர்மபுரி மாவட்டம் சந்தியா என்ற மனைவிக்கு , வைர மோதிரம் பரிசு. தர்மபுரி மாவட்டம் அரூர் தொகுதி தேவதர்ஷன் வைர மோதிரம் பரிசு. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி மாணவி காவியா ஸ்ரீராம் மாணவிக்கு வைரம் மோதிரம் பரிசு.
Say no to temporary pleasure say no to drugs என்ற வாசகத்தை மாணவர்களை கூற சொல்லி விஜய் கேட்டார்.
இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற முடியாதவர்கள் நினைத்த மாதிரி மார்க் எடுக்க முடியாதவர்கள் வாழ்க்கையில் துவந்து விடாதீர்கள். வெற்றி தோல்வி நாம் சரியா சமமாக பார்க்க கற்றுக் கொண்டால் போதும் வெற்றி நம்மை தேடி வரும். Success never ending failure is never final. வருகின்ற மூன்றாம் தேதி பார்க்க இருக்கக்கூடிய மாணவர்கள் அவர்களுக்கும் சேர்த்துதான் பேசுகிறேன். எனவே அன்று வரும் மாணவர்களுக்கு மீண்டும் பேசி போர் அடிக்க விரும்பவில்லை. மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம் என கூறி தனது பேச்சை முடித்தார்
உங்களுடைய அடையாளத்தை எப்பொழுதும் இழந்து விடாதீர்கள் எதற்காகவும் அடையாளத்தை இழந்து விடாதீர்கள். இதை ஏன் வலியுறுத்தி கூறுகிறேன் என்றால், தமிழ்நாட்டில் போதை பொருட்களின் பயன்பாடு, இளம் தலைமுறையினர்கள் மத்தியில் அதிகமாகிவிட்டது. பெற்றோர் என்ற முறையிலும் அரசியல் கட்சி தலைவர் என்ற முறையிலும் எனக்கு அச்சமாக உள்ளது. போதை பொருட்களை தடுப்பது அரசின் கடமை, ஆளுகின்ற அரசு அதை தவற விட்டு விட்டார்கள் என்றெல்லாம் பேச வரவில்லை. அதற்கான மேடை இது அல்ல. அரசாங்கத்தை விட நம்முடைய வாழ்க்கையை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கட்டத்திற்கு பிறகு பெற்றோர்களை விட அதிகமாக நண்பர்களுடன் தான் நேரத்தை செலவு செய்வோம். எனவே நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள் . உங்கள் நண்பர்கள் யாராவது தவறான பழக்கவழக்கங்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களை நல்வழியில் கொண்டுவர முடிந்தால் பாருங்கள். தவறான பழக்க வழக்கங்களில் ஈடுபடாதீர்கள். ஈடுபடக் கூடாது என மாணவர்களுக்கு அறிவுரை
உண்மை செய்தி எது என்பதை நீங்கள் ஆராய்ந்து தெரிந்து கொண்டீர்கள் என்றால், ஒரு சில அரசியல் கட்சிகள் செய்கின்ற பொய்யான பிரச்சாரங்களை நம்பாமல் எது சரி எது தவறு எது உண்மை பொய் என்பதை ஆராய்ந்து நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கும் விசாலமான உலக பார்வை , உங்களால் வளர்த்துக் கொள்ள முடியும்.
அது வளர்ந்து விட்டால் போதும் அதைவிட சிறந்த அரசியல் எதுவும் இருக்க முடியாது. அதைவிட நாட்டின் வளர்ச்சிக்கு நீங்கள் செய்யும் பங்களிப்பு வேறு எதுவும் இருக்க முடியாது.
படிக்கும் பொழுதே மறைமுகமாக அரசியலில் ஈடுபடலாம். தினமும் செய்தித்தாள்களை படியுங்கள் . ஒரே செய்தியை ஒரு செய்தித்தாள் ஒரு மாதிரி எழுதுவார்கள். அதே செய்தியை வேறு ஒரு செய்தித்தாள் வேறு மாதிரி எழுதி இருக்கும். நியூஸ் வேறு; அதில் இருக்கும் கருத்து வேறு. மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்கள் தற்பொழுது ஒப்பினியன்கள் கிரேட் செய்கிறார்கள். ஒரு நல்லவரை கெட்டவராக காட்ட முடியும். கெட்டவரை நல்லவராக காட்ட முடியும். நீங்கள் படியுங்கள் அனைத்தையும் பாருங்கள். எது உண்மை என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள்.
எதிர்கலத்தில் அரசியலும் ஏன் கேரியர் ஆப்ஷனாக இருக்கக் கூடாது? படித்தவர்கள் அரசியலுக்கு வாரணமா வேண்டாமா? என மாணவர்களை நோக்கி விஜய் கேட்டார். மேலும் இப்போதைக்கு படியுங்கள். மீதியை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்றார்.
எந்தத் துறையும் நல்லதுதான்.. 100 சதவீதம் உழைப்பைக் கொடுத்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்று நடிகரும் தவெக தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார். 21 மாவட்டங்களில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோவைத் தொடர்ந்து, ஏர்டெல் நிறுவனமும் தொலைபேசி கட்டணங்களை உயர்த்துவதாக அறிவிப்பு
மாநிலங்களவையில் இன்றைய நிகழ்வுகளை ஒத்திவைத்து நீட் முறைகேடு விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. சையத் நாசீர் உசைன் மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கருக்கு கடிதம்
தவெக சார்பில் 2வது ஆண்டாக நடைபெறும் கல்வி விருது வழங்கும் விழாவில் பங்கேற்க காலை முதலே வருகை தந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் முதல் கட்டமாக நடைபெறும் விழாவில் 800க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது
கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கோரி இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்கிறார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். ஏற்கனவே அதிமுக, பாஜக ஆளுநரை சந்தித்த நிலையில் தேமுதிகவும் சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை பகுதியில் கனமழை பெய்து வருவதால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Background
- செல்போன் கட்டணத்தை உயர்த்துவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வானது, வரும் ஜூலை 3ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வர உள்ளது. இந்த கட்டணமானது ரூ.12 முதல் ரூ.25 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 1 GB Data வீதம் 28 நாள்களுக்கு வழங்கப்பட்டு வரும் பிளானின் புதிய கட்டணம் 249 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் பழைய கட்டணம் ரூ.209 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் இன்று பாராட்டு விழா நடத்துகிறார். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தொடங்கிய பின் நடக்கும் முதல் நிகழ்ச்சி என்பதால் அரசியல் வட்டாரத்தில் இந்நிகழ்ச்சி மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இன்று 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்.
- டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடந்த ஆட்டத்தில் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியா, முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு வந்த தென்னாப்பிரிக்கா அணியுடன் மோதுகின்றது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -