Breaking News LIVE: கோயம்பேட்டில் ஆம்னி பேருந்துகளில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம் - உயர்நீதிமன்றம்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
ஆம்னி பேருந்துகளில் கோயம்பேட்டில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆதரவு சுயேட்சைகள் முன்னிலை பெற்றுள்ள நிலையில், எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என இம்ரான் கான் அறிவித்துள்ளார்.
பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கில் தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் மற்றும் மருமகளுக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
பாலியல் வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மேல்முறையீடு செய்துள்ளார்.
பிரதமர் மோடியை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நேரில் சந்தித்தார்.
கோவை மதுக்கரையில் தங்க நகைப் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலைக்குள் இருப்பதாக கூறப்படுகின்றது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரியில் பஞ்சுமிட்டாய் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சுமிட்டாயில் அதிகளவு ரசாயனம் கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ள நிலையில், விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், ”குழந்தைகளின் உடல்நலத்தை பாதிக்கும் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாயை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்காதீர்கள்.” என புத்துச்சேரி துணை நிலை தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார்.
Bharat Ratna : முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு பாரத ரத்னா வழங்கப்படும். விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா - பிரதமர் மோடி அறிவிப்பு
Breaking News LIVE : சேலம் பெரியார் பல்கலை பதிவாளர் சஸ்பெண்ட்: முறைகேடு புகாரில் உயர்கல்வித்துறை நடவடிக்கை
பாகிஸ்தானில் நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில், சுயேட்சையாக போட்டியிட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவாளர்களின் முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.
Background
உத்தரகாண்ட் மாநிலம் பன்புல்புராவில் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்த நிலையில், நைனிடால் மாவட்டம் ஹல்த்வானி நகரில் மதக்கலவரம் வெடித்துள்ளது. அரசு நிலத்தில் மதரஸாவை சட்டவிரோதமாக கட்டியதாகக் கூறி மாவட்டம் நிர்வாகம் இடித்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதரஸா இடிக்கப்பட்டதால் வெடித்த கலவரம்:
அதுமட்டும் இன்றி, தரைதளத்தில் இருந்த மசூதி போன்ற கட்டுமானமும் இடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் வெடித்துள்ளன. வன்முறையை கட்டுப்படுத்தும் விதமாக பன்புல்புரா பகுதியில் நைனிடால் மாவட்ட மாஜிஸ்திரேட் (டிஎம்) ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே, சமூக விரோதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது. கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதரஸாவை இடித்த காரணத்தால் ஆத்திரமடைந்த குடியிருப்புவாசிகள் போலீசார் மற்றும் அதிகாரிகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், நிலைமை மேலும் மோசமானது. பதற்றமான சூழலுக்கு மத்தியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் எரிக்கப்பட்டன. இதில் சிக்கி, பல காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் காயமடைந்தனர்.
உத்தரகாண்டில் தொடர் பதற்றம்:
நிலைமையை ஆய்வு செய்ய உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, அவசர கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில், தலைமைச் செயலாளர் ராதா ரதுரி, உத்தரகாண்ட் காவல்துறை தலைவர் அபினவ் குமார் மற்றும் ஏடிஜி (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஏ.பி.அன்சுமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து பேசிய புஷ்கர் சிங் தாமி, "ஹல்த்வானியின் பன்பூல்புரா பகுதியில், நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, நிர்வாகத்தின் ஒரு குழு ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றது. அப்போது, சமூக விரோதிகள் சிலர், போலீசாருடன் தகராறில் ஈடுபட்டனர். இதில், சில காவல்துறை அதிகாரிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் காயம் அடைந்தனர்.
கூடுதல் போலீஸ் மற்றும் மத்தியப் படைகள் அங்கு அனுப்பப்படுகின்றன. அனைவரும் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளோம். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கலவரக்காரர்கள், பொது சொத்துகளுக்கு தீ வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
தொடர்ந்து பேசிய உத்தரகாண்ட் டி.ஜி.பி. அபினவ் குமார், "நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனக்கு கிடைத்த தகவலின்படி, பல காவல்துறை அதிகாரிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் காயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. நிலைமை பதற்றமாக உள்ளது. ஆனால் கட்டுக்குள் உள்ளது. வரும் நாட்களில் இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -