ராஜீவ் மேனன்
மணிரத்னம் இயக்கிய பாம்பே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் ராஜீவ் மேனன். குரு , கடன் ஆகிய படங்களிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். தவிர மின்சார கனவு , கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் , சர்வம் தாளமயம் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 1 மற்றும் 2 ஆம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராஜீவ் மேனன் நடித்துள்ளார். தற்போது போதுமான திட்டமிடல் இல்லாமல் ஒரு படத்தை எடுத்துக் கொண்டே இருப்பது குறித்து ராஜீவ் மேனன் பேசியுள்ளது கருத்துக்கள் சமூக வலைதளத்தில் ரசிகர்களை கவர்ந்துள்ளன. மேலும் பலர் ராஜீவ் மேனன் வெற்றிமாறனை தாக்கி பேசியுள்ளதாக பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.
நான் என்ன உங்கள் அடிமையா ?
மணிரத்னம் இயக்கிய குரு படம் ஒரு அற்புதமான அனுபவம். மூன்று மாதத்தில் அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. அதேபோல் கடன் படம் கொஞ்சம் பெரிய படம். ஆனாலும் மணிரத்னம் படத்தில் என்ன நடக்கும் என்பது பற்றி உங்களுக்கு ஒரு ஐடியா இருக்கும். ஆனால் சமீப காலங்களில் தமிழ் சினிமா ரொம்பவும் மோசமான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. அதுவும் ஓடிடி தளங்கள் வந்த பிறகு ஒரு படத்தை எடுத்துக் கொண்டே இருக்கலாம் , எது வேணாலும் எடுக்கலாம் என்கிற மனநிலை வந்துவிட்டது. இதில் சில இயக்குநர்கள் நடிகர்கள் எங்களுடன் பயணிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். நான் என்ன உங்கள் அடிமையா. இது ஒரு நிலபிரபுத்துவ மனநிலை. எனக்கு ஐடியா வரும்போதுதான் நான் எடுப்பேன் என்று இங்கு நீங்கள் சொல்ல முடியாது. இது சினிமா. சினிமாவில் நூற்றுக்கணக்கானவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். ஜூராசிக் பார்க் மாதிரியான ஒரு படத்தை 72 நாட்களில் எடுத்து முடிக்கிறார்கள். ஆனால் இங்கு போதுமான திட்டமிடல் இல்லை. அந்த வகையில் தமிழ் சினிமா ஒரு தவறான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. இது எல்லாவற்றிலும் பாதிக்கப்படுபவர் அந்த படத்தின் தயாரிப்பாளர் மட்டும்தான். ஒவ்வொரு ஷாட்டிலும் பிரம்மாண்டம் பிரம்மாண்டம் என்று சொல்லி 100 ஜூனியர் ஆர்டிஸ் பயண்படுத்துகிறார்கள்."
என ராஜீவ் மேனன் தெரிவித்துள்ளார். அவர் வெற்றிமாறனை குறிப்பிட்டே இப்படி பேசியுள்ளதாக பலர் தெரிவித்து வருகிறார்கள்