Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் கேளிக்கை விடுதி கூரை இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதான முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 4 நாட்களுக்கு காவல் நீடிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 ஆம் கெஜ்ரிவாலை மீண்டும் ஆஜர்படுத்த அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அதனை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. இதனால் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.
சேலம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது ஏற்கப்பட்டுள்ளது. சேலம் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் செல்வகணபதிக்கு சேலம் மேற்கு மற்றும் வடக்கு தொகுதியில் என இரண்டு இடத்தில் வாக்கு இருப்பதாக அதிமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதற்கான உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் என கூறி தற்காலிகமாக செல்வகணபதி வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனு தற்போது வேட்பு ஏற்கப்பட்டுள்ளது.
Arvind Kejriwal : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான மனு தள்ளுபடி
Arvind Kejriwal : “துணைநிலை ஆளுநர், குடியரசுத் தலைவர்தான் இதில் முடிவெடுக்க முடியும். இதில் நாங்கள் எப்படி தலையிட முடியும்?”: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான மனு தள்ளுபடி
திருச்செந்தூர் அருகே 200-ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பியவருக்கு அடித்த ஜாக்பாட் : வாடிக்கையாளருக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான இருசக்கரவாகனம் பரிசாக வழங்கி கௌரவித்த ஹிந்துஸ்தான் பெட்ரோல் நிறுவனம்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஹிந்துஸ்தான் பெட்ரோல் நிறுவனத்தின் சார்பில் கடந்த தீபாவளி முதல் பொங்கல் வரை விழாக்காலத்தை கொண்டாடும் வகையில் ஹிந்துஸ்தான் பெட்டோல் நிலையங்களால் பவர் பெட்ரோல் நிரப்பும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி மதுரை மண்டலம் உள்ள 54 பெட்டோல் நிலையங்களில் பவர் பெட்ரோல் நிரப்பிய வாடிக்கையாளர்களில் சிறந்த வாடிக்கையாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் முதல் வாடிக்கையாளராக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உடன்குடி பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோல் நிலையத்தில் தொடர்ந்து பவர் பெட்ரோல் நிரப்பிய உடன்குடி பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் சிறந்த வாடிக்கையாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து உடன்குடி பெட்ரோல் நிலையத்தில் இந்துஸ்தான் பெட்ரோல் நிறுவனத்தின் மதுரை மண்டல மேலாளர் டிம் ஜெய்ரஸ் தலைமையில் நடைபெற்ற பரிசு வழங்கும் நிகழ்ச்சில் சிறந்த வாடிக்கையாளராக தேர்வு செய்யப்பட்ட கணேசனுக்கு ரூபாய் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான ஹோண்டா சைன் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.
இந்தியாவின் பணக்காரப் பெண்மணிகளில் ஒருவரான சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸில் இருந்து விலகினார். காங்கிரஸ் சார்பில் ஹரியானா மாநில சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் போன்ற பதவிகளை அவர் வகித்துள்ளார். இந்நிலையில், அவரது மகனும், தொழிலதிபருமான நவீன் ஜிண்டால் குருக்ஷேத்ரா தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இவர் ஏற்கனவே, காங்கிரஸ் சார்பில் இதே தொகுதியில் இருந்து மக்களவைக்கு இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தனது மகன் பாஜக சார்பில் போட்டியிடும் நிலையில் தான், குடும்ப சூழல் காரணமாக காங்கிரஸில் இருந்து விலகுவதாக சாவித்ரி ஜிண்டால் தெரிவித்துள்ளார்.
தேனி ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு இறுதி நாளான நேற்று டிடிவி தினகரன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய மாலை 2 மணி அளவில் வருகை தந்தார்
தேனி அன்னஞ்சி விளக்கிலிருந்து தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு 100 மீட்டர் வரை டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஊர்வலமாக வருக போலீசார் அனுமதி அளித்திருந்தனர்
இந்நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மீறி டிடிவி தினகரன் பிரச்சார வாகனத்தில் அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் ஆட்சியர் அலுவலகத்தில் நுழைய முயன்றதால் காவல்துறையினருக்கும் டிடிவி தினகரன் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது
பின்னர் அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு டிடிவி தினகரன் பிரச்சார வாகனம் மற்றும் அவருடன் ஏராளமானோர் போலீசாரின் தடுப்புகளை மீறி உள்ளே சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அமமுக தேனி தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரன், அமமுக நிர்வாகி ராம் பிரசாத், மற்றும் ஏராளமான அமமுக கட்சி நிர்வாகிகள் மீது தேனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் எல் முருகனின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது
ஆ.ராசா, லோகேஷ் தமிழ்ச்செல்வன் வேட்பு மனு பரிசீலனை நிறுத்திவைப்பு
இதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் ஜெயக்குமார் வேட்பு மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் 33 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
திமுக சார்பில் போட்டியிடும் ஆ இராசாவின் வேட்பு மனு சரி பரப்பு நடந்த போது குளறுபடிகள் இருப்பதால் நிறுத்தி வைக்கப்பட்டது.
அதேபோல் அதிமுக சார்பில் போட்டியிடும் லோகேஷ் தமிழ்செல்வனின் வேட்பு மனு குளறுபடிகள் இருப்பதால் அவரின் வேட்பு மனுவும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
மற்ற வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு ஆ. இராசா மற்றும் லோகேஷ் தமிழ்ச்செல்வனின் வேட்பு மனு சரிபார்க்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
கோவையில், அண்ணாமலை மீது தேர்தல் விதிமுறை மீறல் புகாரளிக்கப்பட்டுள்ளது
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து. தொழிற்சாலையில் பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் பணிபுரிந்து வருகின்றனர்
Breaking Live : 100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தியது மத்திய அரசு. 100 நாள் வேலைக்கான ஊதியத்தை ரூ.319 -ஆக உயர்த்தி அறிவித்துள்ளது மத்திய அரசு
இன்று ஐபிஎல்லில், ராஜஸ்தான் ராயல்ஸ் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸின் சவாலை எதிர்கொள்கிறது. இரு அணிகள் மோதும் ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. அதே நேரத்தில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் அதிகாலை 5.44 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலி 4.2 ஆக பதிவாகியுள்ளது.
மதிமுகவைச் சேர்ந்த ஈரோடு எம்.பி. கணேச மூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அண்ணாமலை எங்களுக்கு போட்டியாளர் இல்லை. பேஸ்புக், டிவிட்டரில் தான் அண்ணாமலை அரசியல் செய்கிறார் - கோவை கண்ணம்பாளையம் பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
Background
மதிமுகவைச் சேர்ந்த ஈரோடு எம்.பி. கணேச மூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1993-இல் திமுகவிலிருந்து வைகோ வெளியேற்றப்பட்ட போது அவருக்கு ஆதரவு தெரிவித்து வெளியேறிய ஒன்பது மாவட்ட செயலாளர்களில் கணேசமூர்த்தியும் ஒருவர். இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பூச்சி மருந்து உண்டதாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கடந்த திங்கள்கிழமை நடந்த போட்டியின்போது ரசிகர் ஒருவர் போட்டியின்நடுவே களத்திற்குள் நிழந்தார். மைதானத்திற்குள் நுழைந்த அந்த ரசிகர் விராட் கோலியின் கால்களை தொட்டு அவரை கட்டிப்பிடித்தார்.
மைதானத்தில் கோலியை சந்திக்க போடப்பட்ட பாதுகாப்பு வளையத்தை கடந்து சென்றதால், காவலர்கள் ரசிகரை உடனடியான களத்தில் இருந்து வெளியே அழைத்து சென்றனர். இப்போது வைரலான வீடியோவில், மைதானத்திற்குள் நுழைந்த ரசிகரை மைதானத்திலேயே பாதுகாப்பு பணியாளர்கள் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து, வீடியோ ஒன்று படுவேகமாக வைரலாகி கடும் கண்டத்தையும் பதிவு செய்ய வைக்கிறது.
மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் முடிவை விமர்சித்துள்ள அக்கட்சி, மிகப்பெரிய சனநாயகப் படுகொலையை அரங்கேற்றி இருப்பதாக கூறியுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -